அக்டோபர்-1 முதல் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை…. நீதிமன்றம் உத்தரவு…!!!

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் கருவறையை புகைப்படம், வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி வருவதால் இதனை தடுக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து கோவிலுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. வருகின்ற அக்டோபர் 1ஆம் தேதி அன்று முதல் தடை உத்தரவு அமலுக்கு வருகிறது.

தவறி கொண்டு வரும் பக்தர்கள் தங்களது கைபேசி மற்றும் வீடியோ சாதனங்களை திருக்கோவில் நுழைவாயிலில் உள்ள கைபேசி பாதுகாப்பு மையங்களில் ஒரு கைபேசிக்கு ரூ.5 கட்டணம் செலுத்தி ஒப்படைக்க வேண்டும்.

Leave a Reply