பெங்களூருவை சேர்ந்த சுஜாதா யாதவ் என்ற ஐடி ஊழியர் கஃபே ஒன்றிற்கு சென்றுள்ளார். அங்கு வேலை காரணமாக ZOOM மீட்டிங்கில் இருந்துள்ளார். அப்போது அந்த கஃபேவிற்க்கு வந்த மற்றொரு வாடிக்கையாளர் சுஜாதாவின் மேசையின் மீது ஒரு கிழிந்த சிறிய தாளில் ஒரு குறிப்பு ஒன்றை எழுதி வைத்துவிட்டு சென்றார். ஆனால் அந்த குறிப்பில் எந்தவித தொலைபேசி எண்ணும் இல்லை.

அந்தக் குறிப்பில் “உங்களது குரல் இங்கு வரைக்கும் கேட்கிறது”என மட்டுமே எழுதப்பட்டிருந்தது. இந்த நிகழ்வை சுஜாதா தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்து இந்த சம்பவம் தனக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி அலுவலக வேலையை பொது இடங்களில் செய்வது குறித்த மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் பதிவிற்கு சிலர்,” கஃபே உங்களது தனியார் அலுவலகம் அல்ல. மற்றவர்கள் அமைதியாக காபி சாப்பிட வந்திருப்பார்கள்” என விமர்சித்திருந்தனர். சில அந்த குறிப்பு எழுதிய நபருக்கு ஆதரவாகவும் கருத்துக்களை பதிவு செய்தனர். மேலும் இந்தப் பதிவு அலுவலக வேலைகளை பொது இடங்களில் செய்வது மற்றவர்களுக்கு இடையூறாகவும், அலுவலக ரகசியங்களை பொதுவெளியில் பேசுவது குறித்த ஆபத்தையும் சுட்டிக்காட்டி உள்ளது.