உலகம் முழுவதும் கூகுளுக்கு அடுத்தபடியாக மக்கள் அதிக அளவு பயன்படுத்தும் இணைய தளம் என்றால் அது youtube தான். இதில் மக்கள் தங்களுக்கென ஒரு சேனலை உருவாக்கி அதில் பல வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள். அதன் மூலமாக தினந்தோறும் வருவாய் ஈட்டி வருகின்றனர். இன்றைய காலகட்டத்தில் யார் வேண்டுமானாலும் youtube சேனல் தொடங்கலாம் என்ற நிலை வந்து விட்டது. இந்நிலையில் பயனர்களின் தேவையை கருதி யூடியூப் புதிய அப்டேட்டுகளை அடிக்கடி வெளியிட்டு வரும் நிலையில் அண்மையில் youtube ஷார்ட்ஸ் வீடியோ ஆப்ஷன் கொண்டுவரப்பட்டது.

அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது தங்கள் பயனர்களுக்கு தொந்தரவாக இருக்கும் விளம்பர பிரிவு ஒன்றை அடுத்த மாதம் முதல் நிறுத்த இருப்பதாக யூடியூப் நிறுவனம் கூறியுள்ளது. யூடியூபில் ஒரு வீடியோ துவங்கும் முன்பு அல்லது இடையிடையே விளம்பரங்கள் வரக்கூடும். அதனைத் தாண்டி overlay adsஎன்ற வகையானது வீடியோவை மறைக்கும் வண்ணம் தோன்றுவதால் அதனை ஏப்ரல் ஆறாம் தேதியோடு கைவிடுவதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு மாறாக வேறு வகை விளம்பரம் வர இருக்கிறது m