இந்தியா வம்சாவளியை சேர்ந்தவர்கள் பல்வேறு துறைகளில் தங்களுடைய ஆளுமை திறனை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் சுந்தர் பிச்சை google நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும் சத்யா நாதெள்ளா மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும் உள்ளனர்.

அந்த வரிசையில் தற்போது இந்திய வம்சாவளியை சேர்ந்த நீல் மோகன் youtube நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பதவி வகிக்க உள்ளார். இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு கூகுளில் இணைந்தார். ஆரம்பத்தில் இருந்தே google நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளில் இவர் பணியாற்றியுள்ளார். அதன் பின் அவர் கடந்த 2012 ஆம் ஆண்டு youtube பிரிவிற்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனை அடுத்து இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு youtube நிறுவனத்தின் தலைமை தயாரிப்பு அதிகாரி ஆனதும் குறிப்பிடத்தக்கது.