இந்திய வம்சாவளியை சேர்ந்த இளம்பெண் குர்சிம்ரன் கவுர் (19). இவர் கனடாவில் உள்ள வால்மார்ட் பேக்கரியில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வால்மார்ட் பேக்கரியின் ஓவனில் இறந்து கிடந்தார். ஓவனில் கருகிய நிலையில் கிடந்த குர்சிம்ரன் கவுர் உடலை அங்கு வேலை செய்யும் அவரது தாயார் பார்த்து கதறி அழுதுள்ளார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இதுவரை எந்த தடயமும் கிடைக்கப்படவில்லை என காவல்துறையினர் தரப்பில் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பேக்கரியில் வேலை செய்த சக ஊழியர்கள் வெளியிட்ட வீடியோக்கள் சர்ச்சையை கிளப்பி உள்ளது. சக ஊழியர் கிறிஸ் பிரீஸி வீடியோவில் வால் மாட்டின் ஓவன் செயல்படும் விதம் குறித்த வீடியோ வெளியிட்டுள்ளார். 5 அடி உயர பெண் தானாகவே உள்ளே சென்று தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பில்லை.

இந்த ஓவனின் கதவுகள் அதிக அழுத்தம் கொடுத்து மூடினால் மட்டுமே மூட முடியும். ஓவனில் தூய்மைப்படுத்துவதற்கு கூட யாரும் செல்வதில்லை. அங்கு பணியாளர்களுக்கு வேலையே இல்லை. இந்த ஓவனின் உள்ளே தனியாக சென்று பூட்டி கொள்ள முடியாது. யாரோ ஒருவர் குர்சிம்ரனை உள்ளே தூக்கி எறிந்து இருக்க வேண்டும்.  இவ்வாறு அந்த வீடியோவில் தெரிவித்து இருந்தார். இதேபோன்று தீ மிர்ரர் என்ற பத்திரிக்கை ஊடகங்களில் மற்றொரு சக ஊழியர் மேரி தெரிவித்த தகவல்கள் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதைத்தொடர்ந்து வால் மார்ட் பேக்கரியை நிறுத்தி வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்திய வம்சாவளி இளம்பெண் இறப்பு குறித்து வால்மார்ட் நிறுவனம் இரங்கல்களை தெரிவித்துள்ளது.