
நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே…. நம்முடைய எதிரணியில் இருப்பவர்களுடைய மனதிலே நம்பிக்கை இன்மை குடி கொண்டிருக்கிறது. செங்கோட்டையில் இருந்து தூய்மை இந்தியா திட்டத்தை அறிவித்த போது, அவர்கள் நம்பிக்கையின்மையை தெரிவித்தார்கள். காந்தி அவர்கள் சொல்லிவிட்டு போனார்.
ஆனால் சுத்தமாகவில்லை. இவர் இந்த திட்டத்தை கொண்டு வந்து என்ன ஆகப் போகிறது என்று சொன்னார்கள். நாங்கள் பெண்கள் திறந்தவெளியில் மலம் கழிப்பதை தடுக்க கழிப்பறைகள் கட்டி கொடுத்தோம், அந்தத் திட்டத்தை அறிவித்தோம். செங்கோட்டையிலிருந்து இதையா ஒரு பிரதமர் சொல்வார். இதுதான் நாட்டின் முக்கியமான விஷயமா என்று கூறினார்கள்.
ஜந்தன் தொடங்கும் போது அப்படித்தான் சொன்னார்கள்.. அவர்கள் கையில் எப்படி பணம் இருக்கும் ? நாங்கள் யோகத்தை பற்றி பேசினோம், ஆயுர்வேதத்தை பற்றி பேசினோம். இதை எல்லாவற்றையும் பற்றி அவர்கள் கிண்டல் அடித்தார்கள். நாங்கள் ஸ்டார்ட் அப் இந்தியா பத்தி சொல்லும்போது, அதைப் பற்றியும் அவர்கள் நிராசையை வெளிப்படுத்தினார்கள்.
ஸ்டார்ட் அப் நடக்கவே நடக்காது என்று சொன்னார்கள். நாங்கள் டிஜிட்டல் இந்தியா பற்றி பேசிய போது…. பெரிய பெரிய வித்வான்கள் எல்லாம் சொன்னார்கள். இந்தியாவில் இணையம் இல்லை. இதை எப்படி செயல்படுத்த முடியும் என்று எல்லாம் கூறினார்கள் ? ஆனால் இன்று டிஜிட்டல் இந்தியா எப்படி இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியும்.
இந்தியாவிலேயே தயாரிப்போம் என்ற திட்டத்தை நாங்கள் பேசிய போது, அதைப் பற்றியும் இவர்கள்கிண்டல் அடித்தார்கள். மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே…. காங்கிரஸ் கட்சி மேலும் அவர்களுடைய நண்பர்கள் வரலாறு என்னவென்றால் ? அவர்களுக்கு இந்தியாவின் திறமையின் மீது எப்போதுமே நம்பிக்கை இருந்ததில்லை. மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே…
இவர்கள் யார் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். இதை நான் சபைக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன், நினைவுபடுத்த விரும்புகின்றேன். பாகிஸ்தான் எல்லையில் நம் மீது தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தது. நம்முடைய நாட்டுக்குள் தீவிரவாதிகள் அனுப்பப்பட்டு கொண்டு இருந்தார்கள். எங்களுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை என்று பாகிஸ்தான் பின்னர் சொல்லும்.
இவர்களுக்கு பாகிஸ்தான் மீது அவ்வளவு அன்பு இருந்தது. இவர்களுடனே பாகிஸ்தான் சொல்வதை நம்பி விடுவார்கள். பாகிஸ்தான் தீவிரவாத நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கும். அதே சமயத்தில் பேச்சுவார்த்தையும் நடந்து கொண்டிருக்கும் என்று சொன்னார்கள்.
இவர்கள் பாகிஸ்தான் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று சொன்னார்கள். காஷ்மீரில் தீவிரவாதத்தின் பிடியில் அந்த நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. ஆனால் காங்கிரஸ் கட்சி காஷ்மீரின் சாதாரண மக்கள் மீது நம்பிக்கை இல்லாமல் இருந்தது. ஆதங்கவாதி, பிரிவினைவாதிகள் மீது இவர்களுக்கு நம்பிகை இருந்தது என தெரிவித்தார்.