செய்தியாளரிடம் பேசிய வானதி சீனிவாசன், கைத்தறியை பற்றி உலக அளவில் ஒரு ஆர்வத்தை உருவாக்குகிறார்.  அதன் வாயிலாக இந்த பொருட்களுக்கு உலக அளவில் முக்கியத்துவம் கிடைக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் One District One Product என்று சொல்வார்கள். ஒரு மாவட்டத்திற்கு ஒரு குறிப்பிட்ட பொருள் என்று…  உத்தரபிரதேசத்திற்கு ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு குறிப்பிட்ட பொருளை கண்டறிந்து,

அந்த பொருட்களை சந்தைப்படுத்தி,  அந்த பொருட்களை செய்பவர்களுடைய வாழ்க்கை தரம் மேம்படுத்துவதற்காக உத்தரப்பிரதேசத்தினுடைய முதலமைச்சர், பாரத பிரதமருடைய கனவினை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். தமிழகத்திலே சட்டப்பேரவையிலே  ஒரு சட்டமன்ற உறுப்பினராக நான் இதை பதிவு செய்து இருக்கிறேன். தமிழகத்தில் கூட One District One Product என்பதை மிகச் சிறப்பாக நிறைவேற்ற முடியும்.

காஞ்சிபுரத்திலே பட்டு,  திண்டுக்கல்லிலே பூட்டு. இன்னும் ஒரு சில இடங்களிலே விவசாய பொருட்கள் சார்ந்த ஒரு சில பொருட்களை அறிமுகம் செய்ய முடியும். இங்கு அதற்கான வரவேற்பையும், மிகச் சிறப்பாக மக்கள் அளிப்பார்கள். ஆனால் இந்த திட்டத்தைப் பற்றி தமிழக அரசு எந்த ஒரு முக்கியத்துவமும் கொடுக்காமல்,  உதாரணமாக ஒரு குறிப்பிட்ட பொருள், ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தில் அதிகமாக உற்பத்தி செய்கிறது, விளைகிறது என்றால் ?

அந்த பொருளை விளைவிப்பவர்களுக்கு அல்லது உற்பத்தி செய்பவர்களுக்கு அரசாங்கத்தினுடைய மானியம்…  பொதுவாக விற்பனை செய்வதற்கு ஒரு விற்பனை வளாகம். மேலும் அந்த பொருளை மற்ற இடங்களில் விளம்பரம் செய்வதற்கான மார்க்கெட் யுக்திகள் என்று தமிழகத்தைச் சார்ந்த பல்வேறு பொருட்களுக்கு உலக அளவில் ஒரு முக்கியத்துவத்தை தமிழக அரசு பெற்றுத்தர முடியும். ஆனால் அவர்களுடைய கவனம் எல்லாம் எப்போது மோடி அவர்களை எப்படி எதிர்ப்பது ? பிரதமர் மோடி அவர்கள் செய்திருக்கின்ற சாதனைகளை எப்படி இருட்டடிப்பு செய்வது ?  இதுதான் இன்றைய திமுக அரசின் உடைய நோக்கமாக இருக்கிறது என தெரிவித்தார்.