
கோப்பையுடன் இசையமைப்பாளருடன் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளார் ஸ்மிருதி மந்தனா.
2024 மகளிர் ஐபிஎல்லின் இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற்றது. டெல்லி கேபிடல்ஸுக்கு எதிரான இறுதிப் போட்டியில் ஆர்.சி.பி வெற்றி பெற்றது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதல் பட்டத்தை வென்றது. ஆர்.சி.பி ஆண்கள் அணி கடந்த 16 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் ஒரு பட்டத்தை கூட வென்றதில்லை. ஆனால் இரண்டாவது சீசனிலேயே பெண்கள் அணி பட்டத்தை வென்ற பிறகு, ஆர்.சி.பி ரசிகர்களின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர், இந்திய வீரர் விராட் கோலி போன்ற பிரபல கிரிக்கெட் வீரர்கள் ஆர்சிபி மகளிர் அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஐபிஎல் பட்டத்தை வென்ற பிறகு, ஆர்.சி.பி கேப்டன் ஸ்மிருதி மந்தனா காதலர் என கூறப்படும் ஸ்மிருதி பலாஷ் உடன் காணப்பட்டார். சாம்பியன் கோப்பையை கையில் வைத்துக்கொண்டு இளம் ஜோடி கலக்கியது. வெற்றி பெற்ற பிறகு, ஸ்மிருதி மந்தனா மற்றும் பலாஷ் முச்சல் கோப்பையுடன் சேர்ந்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தனர். இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் அணி தங்கம் வென்றபோது இருவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.. இருவரும் தற்போது டேட்டிங் செய்வதாக கிசுகிசுக்கப்படுகிறது. பாலிவுட்டில் ஒரு நட்சத்திர இசை அமைப்பாளராக அறியப்படுபவர் பலாஸ். அந்த நிகழ்வில் மந்தனாவை சந்தித்த பிறகு அது காதலாக மாறியதாக பாலிவு வட்டாரங்கள் கூறுகின்றன.
Palash muchhal & Smriti Mandhana With WPL Trophy ♥️#RCBvsDC #DCvsRCB #CricketTwitter #WPLFinal pic.twitter.com/BpaoK8sYLV
— RCBIANS OFFICIAL (@RcbianOfficial) March 17, 2024
Smriti Mandhana, RCB's first trophy-winning captain 🫡 🏆celebrating with his Rumoured Boy Friend Palash Muchhal pic.twitter.com/PCLsHSPorh
— ICT Fan (@Delphy06) March 18, 2024