இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நிறைவு பெற்றது. இதில் 3 போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று. இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்தை இந்தியா இழந்துள்ளது. ஆஸ்திரேலிய அணி 62.50 சதவீத புள்ளிகளை பெற்று முதலிடத்திற்கும் முன்னேறி உள்ளது. இலங்கை 556 சதவீத புள்ளிகள் பெற்று 3வது இடத்தில் நீடித்துள்ளது. நியூசிலாந்து 54.55 புள்ளிகள் பெற்று 4வது இடத்தை பிடித்துள்ளது. தென்னாபிரிக்கா 54.17 புள்ளிகளை பெற்று 5வது இடத்திற்கு இறங்கியது.

முதல் 5 இடங்களில் இருக்கும் அணிகள் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான ரேஸில் உள்ளன. ஆனால் இந்திய அணிக்கு இறுதி போட்டிக்கு முன்னேற சிக்கல்கள் எழுந்துள்ளது. இருப்பினும் இந்திய அணி அடுத்ததாக நடைபெற உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்- கவாஸ்கர் கோப்பை தொடரில் 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றால் எந்தவித சிக்கலுமின்றி இறுதிப் போட்டிக்கு முன்னேறும். மாறாக இந்திய அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றால் மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும். ஆனால் இரண்டிற்கும் மேற்பட்ட போட்டிகளில் தோல்வியை சந்தித்தால் வேற வழியின்றி இந்திய அணி நிச்சியமாக வெளியேற நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.