மகளிர் பிரீமியர் லீக் போட்டிகளுக்கான வீராங்கனைகளை 5 அணிகளும் போட்டி போட்டு வாங்கி வருகின்றனர். 

மும்பையில் மகளிர் பிரீமியர் லீக் போட்டிகளுக்கான வீராங்கனைகள் ஏலம் தொடங்கியுள்ளது. ஏலத்தில் மொத்தம் 15 நாடுகளை சேர்ந்த 409 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். குறிப்பாக 90 வீராங்கனைகளை வாங்க 5 அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஏலத்தில் அடிப்படையான தொகை 10 லட்சத்திலிருந்து 50 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் 5 அணிகளும் போட்டி போட்டு வீராங்கனைகளை வாங்கி வருகின்றனர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 3.40கோடி ரூபாய்க்கு ஸ்மிருதி மந்தனாவை ஏலத்தில் எடுத்தது. ஸ்மிருதி மந்தனாவை வாங்க பெங்களூர், மும்பை அணிகள் முனைப்பு காட்டியது. இறுதியில் ஸ்மிருதியை தட்டி தூக்கியது பெங்களூரு. தொடர்ந்து இந்திய கேப்டன் ஹர்மன் பிரீத் கவுரை ரூபாய் 1.8 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. மேலும் இந்திய வீராங்கனை ஷபாலி வர்மாவை காத்திருந்து ரூ 2 கோடிக்கு ஏலத்திலும், இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸை ரூ 2.20 கோடிக்கு ஏலத்திலும் எடுத்தது டெல்லி அணி.. தொடர்ந்து ஏலம் நடைபெற்று வருகிறது. தற்போது வரை இவர்கள் தான் ஏலத்தில் போன முக்கிய வீரர்கள்.

ஐபிஎல்லில் ஏலம் போன வீராங்கனைகள் குறித்து பார்ப்போம் :

இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா – ரூ 3.40 கோடிக்கு ஏலம் (பெங்களூரு அணி)

இந்திய கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் –  ரூ. 1.8 கோடிக்கு ஏலம் (மும்பை இந்தியன்ஸ் அணி)

நியூசிலாந்து ஆல் ரவுண்டர் சோபி டிவைன் – ரூபாய் 50 லட்சத்திற்கு ஏலம் (பெங்களூரு அணி)

ஆஸ்திரேலிய வீராங்கனை எல்லிஸ் பெர்ரி – ரூ 1.7 கோடிக்கு ஏலம் – (பெங்களூரு அணி)

ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லே கார்ட்னர் –  ரூ. 3.20 கோடிக்கு ஏலம் (குஜராத் அணி).

இங்கிலாந்து வீராங்கனை சோஃபி எக்லெஸ்டோன் – ரூ. 1.8 கோடிக்கு ஏலம் (லக்னோ அணி).

இந்திய வீராங்கனை தீப்தி சர்மா –  ரூ. 2. 60 கோடிக்கு ஏலம் (லக்னோ அணி)

இந்திய வீராங்கனை ரேணுகா சிங் –  ரூ. 1.50 கோடிக்கு ஏலம் (பெங்களூர் அணி)

இங்கிலாந்து சேர்ந்த வீராங்கனை நடாலி ஸ்கிவர் – ரூ. 3.20 கோடிக்கு ஏலம் (மும்பை அணி)

ஆஸ்திரேலிய வீராங்கனை தஹ்லியா மெக்ராத் – ரூ 1.40 கோடிக்கு ஏலம் (லக்னோ அணி)

இந்திய வீராங்கனை ஷபாலி வர்மா – ரூ 2 கோடிக்கு ஏலம் (டெல்லி அணி)

ஆஸ்திரேலிய வீராங்கனை மெக் லானிங் – ரூ .1.10 கோடி (டெல்லி அணி)

நியூசிலாந்து வீராங்கணை ஆமேலியா கெர் – ரூ 1 கோடி (மும்பை அணி)

இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் – ரூ 2.20 கோடி (டெல்லி அணி)

ஆஸ்திரேலிய வீராங்கனை பெத் மூனி – ரூ 2 கோடி (குஜராத் அணி)

இங்கிலாந்து வீராங்கனை சோபியா டங்க்லி – ரூ 60 லட்சம் (குஜராத் அணி)