மகளிர் பிரீமியர் லீக் போட்டிகளுக்காக 5 அணிகளும் வாங்கிய முக்கியமான வீரர்கள் யார் என்று தெரிந்து கொள்ளுங்கள்.. 

மும்பையில் மகளிர் பிரீமியர் லீக் போட்டிகளுக்கான வீராங்கனைகள் ஏலம் தொடங்கியுள்ளது. ஏலத்தில் மொத்தம் 15 நாடுகளை சேர்ந்த 409 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். குறிப்பாக 90 வீராங்கனைகளை வாங்க 5 அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஏலத்தில் அடிப்படையான தொகை 10 லட்சத்திலிருந்து 50 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் 5 அணிகளும் போட்டி போட்டு வீராங்கனைகளை வாங்கி வருகின்றனர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 3.40கோடி ரூபாய்க்கு ஸ்மிருதி மந்தனாவை ஏலத்தில் எடுத்தது. ஸ்மிருதி மந்தனாவை வாங்க பெங்களூர், மும்பை அணிகள் முனைப்பு காட்டியது. இறுதியில் ஸ்மிருதியை தட்டி தூக்கியது பெங்களூரு. தொடர்ந்து இந்திய கேப்டன் ஹர்மன் பிரீத் கவுரை ரூபாய் 1.8 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. மேலும் இந்திய வீராங்கனை ஷபாலி வர்மாவை காத்திருந்து ரூ 2 கோடிக்கு ஏலத்திலும், இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸை ரூ 2.20 கோடிக்கு ஏலத்திலும் எடுத்தது டெல்லி அணி.. தற்போது 50க்கும் மேற்பட்ட வீரர்கள் ஏலத்தில் போயுள்ளனர். தொடர்ந்து ஏலம் நடைபெற்று வருகிறது.

ஐபிஎல்லில் ஏலம் போன வீராங்கனைகள் குறித்து பார்ப்போம் :

இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா – ரூ 3.40 கோடிக்கு ஏலம் (பெங்களூரு அணி)

இந்திய கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் –  ரூ. 1.8 கோடிக்கு ஏலம் (மும்பை இந்தியன்ஸ் அணி)

நியூசிலாந்து ஆல் ரவுண்டர் சோபி டிவைன் – ரூபாய் 50 லட்சத்திற்கு ஏலம் (பெங்களூரு அணி)

ஆஸ்திரேலிய வீராங்கனை எல்லிஸ் பெர்ரி – ரூ 1.7 கோடிக்கு ஏலம் – (பெங்களூரு அணி)

ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லே கார்ட்னர் –  ரூ. 3.20 கோடிக்கு ஏலம் (குஜராத் அணி).

இங்கிலாந்து வீராங்கனை சோஃபி எக்லெஸ்டோன் – ரூ. 1.8 கோடிக்கு ஏலம் (லக்னோ அணி).

இந்திய வீராங்கனை தீப்தி சர்மா –  ரூ. 2. 60 கோடிக்கு ஏலம் (லக்னோ அணி)

இந்திய வீராங்கனை ரேணுகா சிங் –  ரூ. 1.50 கோடிக்கு ஏலம் (பெங்களூர் அணி)

இங்கிலாந்து சேர்ந்த வீராங்கனை நடாலி ஸ்கிவர் – ரூ. 3.20 கோடிக்கு ஏலம் (மும்பை அணி)

ஆஸ்திரேலிய வீராங்கனை தஹ்லியா மெக்ராத் – ரூ 1.40 கோடிக்கு ஏலம் (லக்னோ அணி)

இந்திய வீராங்கனை ஷபாலி வர்மா – ரூ 2 கோடிக்கு ஏலம் (டெல்லி அணி)

ஆஸ்திரேலிய வீராங்கனை மெக் லானிங் – ரூ .1.10 கோடி (டெல்லி அணி)

நியூசிலாந்து வீராங்கணை ஆமேலியா கெர் – ரூ 1 கோடி (மும்பை அணி)

இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் – ரூ 2.20 கோடி (டெல்லி அணி)

ஆஸ்திரேலிய வீராங்கனை பெத் மூனி – ரூ 2 கோடி (குஜராத் அணி)

இங்கிலாந்து வீராங்கனை சோபியா டங்க்லி – ரூ 60 லட்சம் ஏலம் (குஜராத் அணி)

இந்திய வீராங்கனை ஹர்லீன் தியோல் – ரூ 40 லட்சம் (குஜராத் அணி)

இந்திய வீராங்கனை பூஜா வஸ்த்ரகர் – ரூ. 1.90 கோடிக்கு ஏலம் (மும்பை அணி)

வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை டியான்ட்ரா டாட்டின் – ரூ 60 லட்சம் (குஜராத் அணி)

ஆஸ்திரேலிய வீராங்கனை அன்னாபெல் சதர்லேண்ட் – ரூ 70 லட்சம் (குஜராத் அணி)

தென்னாப்பிரிக்க வீராங்கனை ஷப்னிம் இஸ்மாயில் – ரூ 1 கோடி ஏலம் (லக்னோ அணி)

இந்திய வீராங்கனை யாஷ்டிகா பாட்டியா – ரூ 1.50 கோடி ஏலம் (மும்பை அணி)

இந்திய வீராங்கனை ரிச்சா கோஷ் – ரூ 1.90 கோடிக்கு ஏலம்  (பெங்களூரு அணி)

ஆஸ்திரேலிய வீராங்கனை அலிசா ஹீலி – ரூ. 70 லட்சம் (லக்னோ அணி)

இந்திய வீராங்கனை அஞ்சலி சர்வானி – ரூ. 55 லட்சம் (லக்னோ அணி)

இந்திய வீராங்கனை ராஜேஸ்வரி கயக்வாட் – ரூ. 40 லட்சம் (லக்னோ அணி)

இந்திய வீராங்கனை ராதா யாதவ் – ரூ 40 லட்சம் (டெல்லி அணி)

இந்திய வீராங்கனை ஷிகா பாண்டே – ரூ 60 லட்சம் (டெல்லி அணி)

இந்திய வீராங்கனை ஸ்னே ராணா  – ரூ 75 லட்சம் (குஜராத் அணி)

தென்னாப்பிரிக்க வீராங்கனை மரிசான் கேப் – ரூ 1.50 கோடி (டெல்லி அணி)

இந்திய வீராங்கனை பார்ஷவி சோப்ரா – ரூ. 10 லட்சம் (லக்னோ அணி)

இந்திய வீராங்கனை டைட்டாஸ் சாது – ரூ 25 லட்சம் (டெல்லி அணி)

இந்திய வீராங்கனை ஸ்வேதா ஷெராவத் – ரூ 40 லட்சம் (லக்னோ அணி)

இந்திய வீராங்கனை எஸ். யஷாஸ்ரீ – ரூ 10 லட்சம் (லக்னோ அணி)

ஆஸ்திரேலிய வீராங்கனை ஹீதர் கிரஹாம் – ரூ 30 லட்சம் (மும்பை அணி)

இந்திய வீராங்கனை சபினேனி மேகனா – ரூ 30 லட்சம் (குஜராத் அணி)

இந்திய வீராங்கனை கிரண் நவ்கிரே – ரூ 30 லட்சம் (லக்னோ அணி)

ஆஸ்திரேலிய வீராங்கனை கிரேஸ் ஹாரிஸ் – ரூ 75 லட்சம் (லக்னோ அணி)

ஆஸ்திரேலிய வீராங்கனை எரின் பர்ன்ஸ் – ரூ 30 லட்சம் (பெங்களூரு அணி)

இந்திய வீராங்கனை தேவிகா வைத்யா – ரூ 1.40 கோடி (லக்னோ அணி)

இந்திய வீராங்கனை மான்சி ஜோஷி – ரூ 30 லட்சம் (குஜராத் அணி)

இங்கிலாந்து வீராங்கனை ஆலிஸ் கேப்ஸி – ரூ 75 லட்சம் (டெல்லி அணி)

இங்கிலாந்து வீராங்கனை இசபெல் வோங் – ரூ 30 லட்சம் (மும்பை அணி)

ஆஸ்திரேலிய வீராங்கனை ஜார்ஜியா வேர்ஹாம் – ரூ 75 லட்சம் (குஜராத் அணி)

ஆஸ்திரேலிய வீராங்கனை லாரா ஹாரிஸ் – ரூ 45 லட்சம் (டெல்லி அணி)

இங்கிலாந்து வீராங்கனை லாரன் பெல் – ரூ 30 லட்சம் (லக்னோ அணி)

இந்திய வீராங்கனை தாரா குஜ்ஜர் – ரூ 10 லட்சம் (மும்பை அணி)

இந்திய வீராங்கனை அமன்ஜோத் கவுர் – ரூ 50 லட்சம் (மும்பை அணி)

இந்திய வீராங்கனை தயாளன் ஹேமலதா – ரூ 30 லட்சம் (குஜராத் அணி)

இந்திய வீராங்கனை ஸ்ரேயங்கா பாட்டீல் – ரூ 10 லட்சம் (பெங்களூரு அணி )

இந்திய வீராங்கனை திஷா கசட் – ரூ 10லட்சம் (பெங்களூரு அணி)

இந்திய வீராங்கனை ஜாசியா அக்தர் – ரூ 20 லட்சம் (டெல்லி கேபிடல்ஸ்)

இந்திய வீராங்கனை மோனிகா படேல் – 30 லட்சம் (குஜராத் ஜெயண்ட்ஸ்)