
மகளிர் டி20 உலக கோப்பை துபாயில் நடைபெற்றது. இந்தப் இந்த கிரிக்கெட் தொடர் இறுதிப்போட்டி நேற்றுடன் முடிவடைந்தது. இதில் இந்திய அணி அரை இறுதிக்கு கூட செல்லவில்லை. லீக் சுற்றிலே வெளியேறியது. இறுதிப் போட்டிக்கு நியூசிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா அணி சென்றது. இதில் t20 உலக கோப்பையை நியூசிலாந்து அணி வென்றது. இதைத்தொடர்ந்து சர்வதேச ஐசிசி கிரிக்கெட் சிறந்த விளையாட்டு வீராங்கனைகளின் பெயரை வெளியிட்டது.
சிறந்த விளையாட்டு வீராங்கனைகளாக ஐசிசி வெளியிட்ட விவரங்கள் பின்வருமாறு,
கேப்டன் வோல்வார்ட், தாஸ்மின் பிரிட்டிஸ், நோன்குலுலேகோம்லபா ஆகிய மூவருமே தென் ஆப்பிரிக்கா அணியை சேர்ந்தவர்கள், மேகன் ஸ்கட் ஆஸ்திரேலியா அணியை சேர்ந்தவர். டேனி வியாட் ஹாட்ஜ் இங்கிலாந்து அணியைச் சேர்ந்தவர்.அமெலியா கெர், ரோஸ்மேரி மேய்ர் இருவரும் நியூசிலாந்து அணியைச் சேர்ந்தவர்கள்.
இந்திய அணியில் ஹர்மன்ப்ரீத் கவுர் சிறந்த பிளேயராக அறிவிக்கப்பட்டார்,தியான்ரா டோட்டின், எபி பிளெட்சர் இரண்டு பேரும் வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்தவர்கள். நிகர் சுல்தானா பங்களாதேஷ் அணியை சேர்ந்தவர். கடைசி வீராங்கனையாக ஈடன் கார்சன் நியூசிலாந்து அணியை சேர்ந்தவர் அறிவிக்கப்பட்டார்.