
கர்நாடகா மாநிலத்தில் உள்ள சாம்ராஜ்நகர் பகுதியில் ஒரு பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. அந்த கண்காட்சியின் போது ஒரு பள்ளி மாணவி ஹிஜாப் குறித்து பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த சிறுமி கூறும் போது ஒரு குறிப்பிட்ட வகை முஸ்லிம் சமூகங்களில் பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயம். அப்படி அவர்கள் அணிந்தால் சொர்க்கத்திற்கு செல்வார்கள். ஆனால் அதனை அவர்கள் அணியாவிடில் நரகத்திற்கு தான் செல்வார்கள் பிறகு அரைகுறையாக உடை அணிந்தால் அவர்கள் மரணத்திற்கு பிறகு அவர்களுடைய சடலத்தை பாம்புகளும்,விஷ புழுக்களும் கடிக்கும் என்று மாணவி கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி ஒரு பெண் ஹிஜாப் அணிவதன் மூலம் அவர் மற்றொரு ஆணை பார்க்க முடியாது. ஒரு ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் பார்க்காமல் இருப்பது மிகப்பெரிய நன்மை. அதன் பிறகு ஹிஜாப் இல்லாமல் சுறுசுறுப்பாக இருக்கும் பெண்ணை அவருடைய கணவன் கண்டிக்க வேண்டும். ஒருவேளை ஹிஜாப் அணியாத பெண்ணை கணவன் கண்டிக்கவில்லை என்றால் அவர்கள் நல்ல ஒரு ஜோடியாக இருக்க தகுதி அற்றவர்கள் என்றும், அந்த கணவனின் பிரார்த்தனையை அல்லா கேட்க மாட்டார் என்றும் கூறியுள்ளார்.
இந்த மாணவி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் இந்த சம்பவம் நடந்த ஜனவரி மாதம் 5ஆம் தேதி நடைபெற்றதாக கூறப்படுகிறது. மேலும் பள்ளியின் கண்காட்சியில் தேவையில்லாமல் மதம் குறித்து மாணவி ஒருவர் பேசியது பெரும் சர்ச்சையாக மாறிய நிலையில் சாம்ராஜ்நகர் மாவட்ட கல்வி அலுவலகர் ராஜேந்திர ராஜே உர்ஸ் இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.