மகாராஷ்டிராவின் கோலாப்பூரில், தனது மனைவி விவாகரத்து பெறாமல் வேறொருவரை திருமணம் செய்ததாகக் கூறி, கணவன் போலீஸ் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷிவாஜிநகர் காவல் நிலையத்திற்கு வந்த ஷேகர் கெய்க்வாட், மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் அளிக்க வந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் அவருக்கு நியாயம் கிடைக்கவில்லை. இதனால் ஆத்திரத்தில், காவல் நிலையத்திலிருந்து வெளியேறிய கெய்க்வாட், அவரது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இதைப்பார்த்த காவல்துறையினர் உடனடியாக செயல்பட்டு அவரை மீட்டனர், இதனால் அவர் உயிர் பிழைத்தார். ஆனால், உடலில் 60% தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன.

தற்போது கெய்க்வாட் கோலாப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.