கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி அருகே இருக்கும் கிராமத்தில் 22 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 வயதில் மகள் இருக்கிறார். இந்நிலையில் நிறைய மாத கர்ப்பிணியான அந்த இளம் பெண்ணை பிரசவத்திற்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். கடந்த 5 நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.

நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் அரசு மருத்துவமனைக்கு 45 வயது மதிக்கத்தக்க பெண் வந்தார். அவர் அங்கிருந்த குழந்தைகளை கொஞ்சி கொண்டிருந்தார். அப்போது இளம்பெண் தனது 2 வயது மகளையும், பிறந்த குழந்தையையும் காணவில்லை என கதறி கூச்சலிட்டதால் பொதுமக்கள் குழந்தைகளை தேடி அலைந்தனர்.

மேலும் குழந்தைகளை கொஞ்சி கொண்டிருந்த அந்த பெண்தான் இரண்டு குழந்தைகளையும் கடத்தி இருக்கலாம் என நினைத்து அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

இதற்கிடையே நடத்தப்பட்டதாக கூறிய இரண்டு குழந்தைகளையும் அவரது பாட்டி தூக்கிக் கொண்டு சென்றுள்ளார். அப்போதுதான் குழந்தைகளை பெண் கடத்தவில்லை என்றும், குழந்தைகளின் பாட்டி தான் அவர்களை தூக்கி சென்றதும் தெரியவந்தது. பின்னர் போலீசார் அந்த பெண்ணை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் கடலூர் அரசு மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.