அமெரிக்காவில் ஒரு இரவு நேரத்தில் சாலையோரத்தில் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. அந்தக் காரில் பெண் ஒருவர் தூங்கிக் கொண்டிருந்தார். இதனை கவனித்த காவல்அதிகாரி  ஒருவர் சந்தேகத்துடன் விசாரித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில், அந்தப் பெண்ணின் காரில் இரண்டு டயர்களும் இல்லாமல் வெறும் ரிம்கள் மட்டுமே இருந்தது. இதனை கவனிக்க காவல்அதிகாரி அருகில் சென்று விசாரிக்க தொடங்கினார். அந்தப் பெண்ணை அழைத்து காரின் நிலைமையை குறித்து கேட்டபோது, அந்தப் பெண் எனது காரின் ஒரு டயர் பஞ்சர் என பதிலளித்தார்.

இதற்கு அந்த காவலதிகாரி உங்கள் காரின் டயர் பஞ்சர் இல்லை. உங்கள் காரில் டயரே இல்லை என நகைச்சுவையாக பதிலடி கொடுத்தார். இதனைத் தொடர்ந்து காரை விட்டு கீழே இறங்கிய அந்தப் பெண்ணிடம் உங்களது கார் ஏன் முன்புறமும், பின்புறமும் சேதமடைந்திருக்கிறது என கேள்வி எழுப்பினார்.

அதற்கு அந்தப் பெண் நான் ஒரு சுவற்றில் மோதியுள்ளேன். ஏற்கனவே எனது கார் சேதமடைந்துள்ளது. இது குறித்து காவல்துறையினரிடம் விளக்கம் அளித்துள்ளேன் என கூறினார். இதற்கிடையில் தாங்கள் வரும் வழியில் ஒரு டயர் சாலையோரம் கிடந்ததையும் காவல்அதிகாரி  அந்த பெண்ணிடம் கூறினார்.

காவல்துறையினரின் கேள்விகளுக்கு முன் பின் முரணாக அந்தப் பெண்ணின் பதில்கள் இருந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பலரும் கலவையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் அந்தப் பெண் எந்த நிலையில் உள்ளார் என்பதை கூட தெளிவாக புரிந்து கொள்ள முடியவில்லை. அவரது பதில்கள் மிகவும் குழப்பமானதாக இருக்கிறது என வீடியோவை பார்த்த பலரும் தெரிவித்துள்ளனர்.