
வடகாட்டில் உள்ள காலி மைதானத்தை பயன்படுத்திக் கொள்ள பட்டியலின மக்கள் ஆணை பெற்றிருந்தனர். இந்நிலையில், அதற்கு அனுமதி வழங்காமல் காவல்துறையினர் தடை விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுக்கோட்டையில் விசிக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக வந்த விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, அதிமுகவும் பாஜகவும் சேர்ந்து தேர்தலை சந்திப்போம் என்று அறிவித்துள்ளனர். அவர்கள் கூட்டணி தொடருமா? என்பது எனக்கு தெரியாது. அதே கூட்டணியில் இடம் பெற்று இருந்த பாமக இன்னும் கூட்டணி பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை. மேலும் தாங்கள் எந்த அணியில் உள்ளோம் என்பதை அவர்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. தேமுதிக என்ன செய்யும் என்று யாருக்கும் தெரியாது. ஆகவே அதிமுக பாஜக ஒரு கூட்டணியாக வடிவம் பெறவில்லை என்று தெரிவித்தார்.