தமிழக சட்டப்பேரவையில் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று வினாக்கள் விடைகள் நேரம் நடைபெற்றது. அதில் தமிழகத்தில் மூட நம்பிக்கையை ஒழிக்க அரசு தனிச்சட்டம் கொண்டு வருமா? என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அமைச்சர் ரகுபதி ஒருவருக்கு நம்பிக்கை என்று இருப்பது மற்றொருவருக்கு மூடநம்பிக்கையாக இருக்கிறது.

அவரவர் உரிமையில் தலையிடுவது சரியாக இருக்காது. நம்முடைய கொள்கைகளை பின்பற்றலாம். ஆனால் அதற்காக மற்றவர்களின் மத நம்பிக்கையில் தலையிடுவது சரியாக இருக்குமா? என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.