இந்திய அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது முதல் டெஸ்ட் போட்டிலிலேயே சதமடித்து அசத்தியுள்ளார்..

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான ஆட்டத்திலேயே சதம் அடித்து இந்திய வீரர் ஜெய்ஸ்வால் புதிய சாதனை படைத்துள்ளார். 21 வயதான ஜெய்ஸ்வால் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.. கவாஸ்கர், விராட் கோலி போன்ற  வீரர்கள் தங்களது முதல் டெஸ்ட் போட்டியை மேற்கிந்திய மண்ணில் விளையாடினர்.

ஜாம்பவான்கள் பட்டியலில் ஜெய்ஸ்வாலும் இடம்பெறுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அதற்கு ஜெய்ஸ்வால் தற்போது தனது பேட் மூலம் பதில் அளித்துள்ளார். ஆடுகளம் மிகவும் ஈரமாக இருந்தது, பேட்டிங் சற்று கடினமாக இருந்தது. இருப்பினும் ஜெய்ஸ்வால் தனது திறமையை பயன்படுத்தி பந்துகளை சிறப்பாக எதிர்கொண்டு ரன்களை சேர்த்தார்.

பொறுமையாக இருந்து பந்தை அடிக்க வேண்டிய நேரத்தில் பொறுமையாக இருந்த ஜெய்ஸ்வால், ஸ்கோரை நகர்த்தினார். 104 பந்துகளில் அரை சதத்தை பூர்த்தி செய்த ஜெய்ஸ்வால் அப்போது 7 பவுண்டரிகள் அடித்திருந்தார். ஜெய்ஸ்வால் தொடர்ந்து நங்கூரமிட்டு மேற்கிந்திய தீவுகளுக்கு பெரும் சோதனையை அளித்தார்.

திடீரென ரிவர்ஸ் ஸ்வீப், கட் ஷார்ட் என விதவிதமான ஷாட்களை ஆடி ரன் சேர்த்தார் ஜெய்ஸ்வால். இதன் மூலம் ஜெய்ஸ்வால் 215 பந்துகளை எதிர்கொண்டு அறிமுக ஆட்டத்தில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார். இதில் 11 பவுண்டரிகளும் அடங்கும். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுக போட்டியில் சதம் அடித்த 17வது இந்திய வீரர் என்ற பெருமையை ஜெய்ஸ்வால் பெற்றார்.

ஜெய்ஸ்வால் மேற்கிந்தியத் தீவுகளில் தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார். இந்தியாவுக்கு வெளியே அறிமுக போட்டியில் சதம் அடித்த 5வது இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

அதேபோல், டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க ஆட்டக்காரராக சதம் அடித்த மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையையும் ஜெய்ஸ்வால் பெற்றார். தற்போது, ​​அசாருதீன், கங்குலி, சேவாக், ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னா, குண்டப்பா விஸ்வநாத், லாலா அமர்நாத், ஷிகர் தவான் போன்ற சிறந்த வீரர்கள் பட்டியலில் ஜெய்ஸ்வால் இணைந்துள்ளார்.

ஸ்கோர் விவரம் : 

வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய நிலையில், முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக அஸ்வின் 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.. பின்னர் ஆடிய இந்திய அணி முதல் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்தது. ரோகித் சர்மா 30 ரன்களும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 40 ரன்களும் எடுத்தனர். தொடர்ந்து இரண்டாவது நாளில் ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால் இருவரும் சிறப்பாக ஆடி சதம் விளாசினர். ரோஹித் 103 ரன்களில் அவுட் ஆனார். பின் வந்த சுப்மன் கில் 6 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து விராட் கோலி (36 ரன்கள்) மற்றும் ஜெய்ஸ்வால் (143 ரன்கள்) இருவரும் ஆடி வருகின்றனர். இந்திய அணி 113 ஓவரில் 312/2 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா 162 ரன்கள் முன்னிலையில் உள்ளது.