இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்தியா இங்கிலாந்து அணிகள் இடையேயான முதல் போட்டி ஜூன் 20-ம் தேதி லீட்சில் நடைபெற உள்ளது. இதற்கு 18 வீரர்கள் கொண்ட இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி மும்பையில் நேற்று அறிவிக்கப்பட்டது. அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு அணியை தேர்வு செய்த அறிவித்தது. இதில் இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் அந்த அணியில் உள்ளூர் போட்டிகளில் ரன் குவித்த கருண் நாயர் 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அணிக்கு திரும்புகிறார். இதேபோன்று ஆல்ரவுண்டர் ஹர்ஷித் தாக்கூர் மீண்டும் இடம் பிடித்துள்ளார். ஆனால் ஹர்ஷித் ராணா, சர்ப்ராஸ் கான் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இதில் சர்ப்ராஸ் கான் நீக்கப்பட்டது பலரது மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் உள்ளூர் தொடர்களில் அசத்தியதன் மூலம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான இவர் அடுத்தடுத்து சதங்கள் அடைத்து அசத்தினார்.

அத்துடன் கடந்த நியூஸிலாந்து தொடரில் சதம் அடித்து இந்தியாவின் வெற்றிக்கு போராடினார். அப்படிப்பட்ட அவரை நீக்கி உள்ள தேர்வு குழு கருண் நாயரை தேர்வு செய்தது பலரது மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம் அளித்துள்ளார். இந்த முடிவு ஒருவருக்கு நியாயமாகவும், மற்றொருவருக்கு அநியாயம் ஆகவும் தெரியலாம். தற்சமயத்தில் கருண் நாயர் உள்ளூர் நிறைய ரன்களை குவித்தார்.

மேலும் கவுண்டி தொடரிலும் விளையாடினார். சில நேரங்களில் நீங்கள் நல்ல முடிவுகளை எடுக்க வேண்டும் சர்ப்ராஸ் கான் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் 100 ரன்கள் எடுத்தார். பின்னர் ரன்கள் எடுக்க வில்லை. சில நேரங்களில் இது போன்ற முடிவுகளை இந்திய அணி நிர்வாகம் எடுக்கிறார்கள். தற்சமயத்தில் கருண் நாயர் உள்ளே நிறைய ரன்களை குவித்தார்.

விராட் இல்லாததால் தற்போதுள்ள அணியில் கொஞ்சம் அனுபவம் இல்லை என்பது தெளிவாகிறது. இந்த சூழலில் கருண் நாயரின் அனுபவம் உதவும் என்று நாங்கள் உணர்ந்தோம் என்று கூறினார்.