பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரணாவத். இவர்  இமாச்சல் பிரதேசத்தில் உள்ள மண்டி தொகுதியின் பாஜக எம்பியும் ஆவார். இவர் எம்பியாக வெற்றி பெற்றதில் இருந்து அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். குறிப்பாக டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தை வங்கதேச வன்முறையுடன் ஒப்பிட்டு பேசினார். இதற்கு பாஜக தலைமையிடமே அவரை கண்டித்து இருந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் கங்கனா ரணாவத் பேசிய ஒரு விஷயம் சர்சையாக மாறியுள்ளது.

அதாவது செய்தியாளர்களை சந்தித்து அவரிடம் இந்தியர்கள் அதிக அளவில் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு குடிபெயர்க்கிறார்களே ஏன் என பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். கடந்த 10 வருடங்களில் இந்தியர்கள் தங்களுடைய குடியுரிமையை துறந்துவிட்டு அதிக அளவில் வெளிநாட்டுக்கு குடிபெயர்க்கிறார்கள் என்றும் கேட்கப்பட்டது. மேலும் இதற்கு நடிகை கங்கனா ரணாவத் இந்தியாவில் மக்கள் தொகை அதிகமாகி விட்டது. எனவே மக்கள் இதுபோன்று நாட்டை விட்டு செல்வது மிகவும் நல்லது தான் என்று கூறினார். அவருடைய கருத்து சர்ச்சையாக மாறியுள்ள நிலையில் பலரும் விளாசி வருகிறார்கள்.