மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள மும்பையில் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே இயக்கப்படும் சிறப்பு ரயில்  உத்திரப்பிரதேசத்திலிருந்து, கோரக்கூருக்கு  இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் பயணிக்க முன்பதிவு அவசியம் இல்லை. இந்த நிலையில் தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால்  இந்த ரயிலில் பயணம் செய்வதற்கு அதிகமானோர் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளனர். இதனிடையே ரயில் காலை 5.10 மணிக்கு பாந்தராவிலிருந்து புறப்படும் எனக் கூறப்பட்டதை விட சற்று தாமதமாகவே ரயில் நிலையத்திற்கு வந்தது.

இந்த நிலையில் அதிகாலை 3 மணியிலிருந்து ரயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது. ரயில் நிலையத்திற்குள் ரயில் வந்ததும் உடனே பயணிகள் அனைவரும் ஏறுவதற்காக வேகமாக சென்றனர். இதனால் அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் சிலர் மயக்கம் அடைந்தும், சிலருக்கு எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே காவல்துறையினர் தெரிவித்ததாவது, இந்த சம்பவத்தில் 2 பேருக்கு எலும்பு முறிவும்,9 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் உடல்நலம் சரியாகி வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.