
தாய்லாந்தின் பாங்காக் நகரத்தில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தில் சமீபத்தில் ஒரு வித்தியாசமான மற்றும் மனதை வருடும் சம்பவம் நடைபெற்றுள்ளது. அதாவது அமெரிக்கன் ஷார்ட்ஹேர் வகை பூனை ஒன்று, தனது உரிமையாளரைத் தொலைத்து, தனியாக வீதியில் சுற்றி கொண்டிருந்தது.
அந்த பூனைவை ஒருவர் பார்த்து, பாதுகாப்புக்காக போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டு வந்தார். அந்த பூனை மிகவும் அமைதியாக இருந்தது. அதனை போலீசார் புகைப்படம் எடுத்த போது அழகாக போட்டோக்கு போஸ் கொடுத்தது. அதன்பின் அந்த போட்டோவை ஒரு சிரிப்பூட்டும் விதமாக சமூக வலைதளத்தில் போலீசார் பகிர்ந்தார்.
அதாவது தனது பேஸ்புக் பக்கத்தில் அந்த பூனைவின் புகைப்படங்களை போலீசார் பகிர்ந்து, அதில் அவர், “இந்த பூனை ஒரு போலீஸ் அதிகாரியை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தற்போது பிணையில் விடுவிக்கப்படுகிறது. தயவுசெய்து இதை பகிருங்கள், அதன் உரிமையாளர் வந்து பிணை செலுத்தட்டும்!” என நகைச்சுவையுடன் எழுதியுள்ளார்.
மேலும், பூனை ஒரு பிங்க் ஹார்னஸ் அணிந்திருந்ததோடு, அதன் கழுத்தில் பூச்சூடி போல ஒன்றும் இருந்தது. அந்த புகைப்படங்களில் ஒன்றில் அந்த பூனையை போலீஸ் அதிகாரி மெதுவாக தடவும் காட்சியும் அனைவரையும் கவர்ந்து வருகிறது.
இத்தகவல் சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி, மக்கள் இதை பாராட்டியதோடு, அதிகாரியின் நயமான அணுகுமுறையும், பூனைவின் இனிமையான எதிர்வினையும் அனைவரின் இதயத்தையும் வென்றது.
பின்னர் அதிகாரி மேலும் ஒரு நகைச்சுவை பதிவில், “விசாரணை அதிகாரி வழக்கை மூடி விட்டார். என் பெற்றோர் வந்து என்னை அழைத்துச் சென்றனர். இப்போது நான் பயிற்சிக்குச் செல்கிறேன்” என கூறினார்.
தனியாக வீதியில் திரிந்த பூனைக்காக, இவ்வாறு நக்கலுடன் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து உரிமையாளரைத் தேட முயன்ற இந்த முயற்சி அனைவரிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.