
குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் விமான நிலையத்தில் நடந்த ஒரு அசாதாரண சம்பவம் பயணிகள் மற்றும் விமான நிலைய ஊழியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜெய்ப்பூருக்குப் புறப்பட இருந்த இண்டிகோவின் ஏர்பஸ் A320 விமானத்தின் திறந்திருந்த லக்கேஜ் கதவில் தேனீக்கள் கூட்டம் அமர்ந்ததால் விமானம் நேரத்துக்குள் புறப்பட முடியவில்லை. இந்த பரபரப்பான சூழல் காரணமாக விமானம் 1 மணி நேரம் தாமதமாக விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.
गुजरात के सूरत एयरपोर्ट पर सोमवार शाम को इंडिगो की एक फ्लाइट जयपुर के लिए रवाना होने वाली थी लेकिन तभी फ्लाइट पर मधुमक्खियों के झुंड ने धावा बोल दिया. जानकारी के मुताबिक फ्लाइट रनवे पर टेकऑफ करने ही वाली थी लेकिन मधुमक्खियां फ्लाइट के लगेज गेट पर बैठ गईं. इससे लगेज की लोडिंग में… pic.twitter.com/8IgPp4NJTO
— NDTV India (@ndtvindia) July 8, 2025
கடந்த திங்கட்கிழமை மாலை 4.20 மணிக்கு புறப்பட திட்டமிடப்பட்டிருந்த விமானம், தேனீக்கள் தொல்லையால் மாலை 5.26 மணிக்கே புறப்பட முடிந்தது.
எல்லா பயணிகளும் விமானத்தில் ஏறிய பிறகும், சாமான்கள் வைக்கப்பட்டதும் இந்த அதிர்ச்சிக்குரிய நிலை ஏற்பட்டது. தேனீக்கள் சாமான்கள் கதவின் பகுதியில் கூட்டமாக திரண்டதால், விமான ஊழியர்கள் பெரும் சங்கடத்தில் சிக்கினர்.
தொடர்ந்தும் தேனீக்கள் விரட்டப்படாத நிலையில், தீயணைப்புப் படையினர் அழைக்கப்பட்டனர். அவர்கள் ஓடுபாதைக்கு சென்று தேனீக்கள் மீது தண்ணீரை தெளித்ததன் மூலம், சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தேனீக்கள் அகற்றப்பட்டன. அதன் பின்னர் விமானம் புறப்பட அனுமதி பெற்றது.
இந்த சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்பது முக்கிய செய்தியாகும். ஆனால் இந்த அசாதாரண சூழல், விமான நிலையங்களில் பாதுகாப்பு மற்றும் சூழ்நிலை மேலாண்மை குறித்து புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.