செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  யார் யார்கிட்ட பணம் குடுத்து இருகாங்க? எங்கேங்க பணம் பதுக்க பட்டு இருக்கு? யார் யார்கிட்ட எவ்ளோ குடுத்து இருகாங்க? அது எல்லாம் வெளில வரும். அதுனால இப்போம் ஒன் பை ஒன்னாக நெஞ்சி வலி ஆரம்பிச்சிச்சு. அப்போ செந்தில் பாலாஜிக்கு நெஞ்சி வலி  ஆரம்பிச்சிச்சு.. இப்போ பொன்முடிக்கு நெஞ்சி வலி  ஆரம்பிச்சிச்சு.. அடுத்தது அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனுக்கு நெஞ்சி வலி ஆரம்பிச்சிட்டு…

ஆகையால இப்போம் ED கூப்பிட்டு விசாரிச்சு அனுப்பிச்சாங்க… இது எப்படி இருக்குன்னா…?  ஒரு தீர்ப்பை பொறுத்த வரையில,  தூக்கு தண்டனை என கொடுத்துட்டா உடனே அவனுக்கு தெரிஞ்சிரும். இன்னைக்கு தூக்கு தண்டனை கொடுத்து,  நாளைக்கு அதனை நிறைவேற்றி விட்டுடோம் என்றால் ? அது சித்திரவதை அல்ல.

ஏதோ இன்னிக்கு குடுத்தாங்க.. நாளைக்கு போட்டாங்க.. ஆனால் தூக்கு தண்டனை கொடுத்துட்டு,  ஒரு வருஷம் கழிச்சு தூக்கு  போடுறாங்க இல்லையா…. அவங்க ஒரு வருஷம் தூக்கம் இருக்குமா?… கண்டிப்பா இருக்காது.  இரவெல்லாம் பாத்தீங்கன்னா….  எப்போ சாவுவோம்… எப்போ சாவுவோம்..எப்போ சாவுவோம்… அந்த நினைப்பு தான் இருக்கும். இப்போ பொன்முடிக்கு என்ன தெரியுமா? இரவெல்லாம் தூக்கம் இருக்காது..

அவரை பொறுத்த வரையில் எப்போ கைதாவோம்… எப்போ கைதாவோம்…. எப்போ கைதாவோம் … என இது தான் மரண பயத்த  பொன்முடிக்கு ஏற்படுத்தி இருக்கு. அதுனால ஸ்டாலின் சொன்ன மாதிரி,  தூக்கத்தை எல்லாம் அமைச்சர் கெடுத்த மாதிரி…  எல்லாருமே தூக்கம் இல்லாம இருக்கின்ற கேபினெட் தான் இன்னைக்கு  தமிழ்நாட்டை ஆண்டுட்டு இருக்காங்க என தெரிவித்தார்.