நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  நீ அரேபிய நாடுகளுக்கு போ….  ஐரோப்பிய நாடுகளுக்கு போ….  தவிர்க்க இயலாத பொதுத்தளங்கள், மருத்துவமனை…. பயணகம்…. வானூர்தி நிலையம்… இது போன்ற இடங்களில் சிறிதாக ஆங்கிலத்தில் எழுதி வைத்திருப்பார்கள். பயணம் போனவர்களுக்கு தெரியும். அண்ணன் போக முடியாது…. கடவு சீட்டு இல்ல நீ போய் பாரு.

அண்ணன் சொன்னேங்குறதுக்காக போய் பாத்துட்டு வா… அவன் தாய் மொழியில் இருக்கும். இது தவிர்க்கவே முடியாது பொது இடம். அப்போ கொஞ்சோண்டு இங்கிலீஷ்ல எழுதி இருப்பான்…. ஹாஸ்பிடல் அப்படினு எழுதி இருப்பான். ஆனால் நீ பெருசா எழுதிட்டு போற…  நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் மாறிரும். எப்படி சீமான் தேர்வுளில் தமிழ் பெயரில் கொண்டு வருவ…. 

எம்.ஜி.ஆர் போட்ட சட்டத்தை மறுபடி புதுப்பிப்பேன்…. புதுப்பிச்சி,  கருணாநிதி மாதிரி ஏமாற்ற மாட்டேன்….  ஜெயலலிதா மாதிரி கைவிட்டு போக மாட்டேன்… செயல் படுத்துவேன்….. ஏனென்றால்  நான் நல்ல தமிழ் தாய்க்கும், தமிழ்  தகப்பனுக்கும் பிறந்தவன் என தெரிவித்தார்.