
பீகார் மாநிலத்தில் சமீபத்தில் வயல்வெளிக்குள் ஒரு பாலம் கட்டப்பட்டிருந்தது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அந்த வகையில் தற்போது பீகார் மாநிலத்தில் மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது ஒரு ரயில் இன்ஜின் ஒன்று வயல்வெளிக்குள் சம்பந்தமே இல்லாமல் தனியாக நின்றது. இதனை பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ரயில் நின்ற இடத்திற்கு சென்ற நிலையில் அதனை அதிசயமாக சுற்றி நின்று வேடிக்கை பார்த்தனர். இது தொடர்பான புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இதனைப் பார்த்து நெட்டிசன்கள் பலரும் ரயிலை வைத்து வயலை உழும் அளவிற்கு நாம் முன்னேற்றம் அடைந்து விட்டோம் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் வாசீர் கஞ்சி ரயில் நிலையத்திலிருந்து ரயில் பெட்டிகள் எதுவும் இல்லாமல் ரயில் எஞ்சின் ஒன்று சென்றது. இந்த எஞ்சின் திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளான நிலையில் வயல்வெளிக்குள் புகுந்தது தெரியவந்துள்ளது. மேலும் இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனினும் இது குறித்தான முழுமையான தகவல்களை ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.
बिहार…
गया – वज़ीरगंज स्टेशन एवं कोल्हना हाल्ट के बीच रघुनाथपुर गांव के निकट एक रेल इंजन ट्रैक से नीचे उतरकर खेत में चला गया, इंजन के साथ कोई बोगी नहीं थी…#Bihar pic.twitter.com/mjhUV0EI57
— Gaurav Kumar (@gaurav1307kumar) September 15, 2024