
குறுஞ்செய்திகள், ஆவணங்கள் மட்டுமின்றி புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பவும் இப்போது உலகளவில் பெரும் பயன்பாட்டில் இருப்பது வாட்ஸ்அப். பயனாளர்களை கவரவும், பாதுகாப்பு அம்சங்களுக்காகவும் வாட்ஸ் அப் அடிக்கடி அப்டேட்களை கொடுத்து வருகிறது. பல்வேறு ஆப்ஷன்கள் whatsapp-ல் இருப்பதே பலருக்கும் தெரிவதில்லை. அதன்படி, உங்கள் லிஸ்டில் உள்ள ஒருவருடைய புகைப்படத்தை டச் செய்தால் “i” பட்டன் இருக்கும்.
சில பேர் மட்டுமே அதில் “i” பட்டன் இருப்பதை கவனித்திருப்பார்கள். நீங்கள் கவனிக்கவில்லை எனில் தற்போதே முயற்சிக்கவும். நீங்கள் வாட்ஸ்அப்-ஐ திறக்கும்போது உங்களது Whatsapp-ல் உள்ள பெயர்கள் லிஸ்ட் வரும். அப்போது ஒருவரின் சுயவிவர புகைப்படத்தை தட்டினால் (i) பட்டனை காண்பீர்கள். ஒருவரது Dp-ஐ டச் செய்தால் முதலாவது செய்தியின் ஐகான், 2-வது குரல் அழைப்பின் ஐகான், 3வது வீடியோ அழைப்பு மற்றும் 4-வதாக i ஆப்ஷன் இருக்கும்.
அந்த i பட்டனை அழுத்தினால் குறிப்பிட்ட நபர் உடனான அனைத்து விபரங்களையும் நீங்கள் பெறலாம். இதுவரையிலும் நீங்கள் அனுப்பிய போட்டோ, ஆடியோ, வீடியோ விவரங்கள் அனைத்தையும் பெறலாம். சேட்டை லாக் செய்யும் வசதியானது அவர் எந்தெந்த குரூப்களில் உள்ளார், அந்த நபரை ப்ளாக் செய்வது (அ) ரிப்போர்ட் செய்வது உள்ளிட்ட அனைத்து ஆப்ஷன்களும் இருக்கும்.