உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம் தோறும் புதுவிதமான அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது புதிய அம்சங்கள் வாட்ஸப்பில் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது என்க்கிரிப்ட் செய்யப்பட்ட வாட்ஸ் அப் சாட்களுக்கு ரகசிய குறியீட்டை சேர்ப்பது மிக முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். பொது அரட்டைகளின் பெயர்களில் இருந்து தனிப்பட்ட ஷாட்களை மட்டும் மறைப்பதற்கு இந்த அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மற்றொரு சேனல் புதுப்பிப்புகளுக்கான அம்சமானது சேனல்களின் பார்வையாளர்களை கணக்கிடுவதற்கான புதிய அம்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் தேதி வாரியாக பயனர்கள் தங்களுடைய குறிப்பிட்ட செய்திகளை தேடுவதற்கான வசதியும் கொண்டு வரப்பட உள்ளது. Whatsapp பீட்டா செயலியில் சேனல் நிர்வாகிகள் தங்களுடைய சேனல்களுக்கான ஸ்டிக்கர்களை பகிர்ந்து கொள்ள முடியும். இது போன்ற பல அம்சங்கள் whatsapp செயலியின் பயனர் அனுபவத்தை மேம்படுத்தவும் பாதுகாப்பை உறுதி செய்யவும், பயணர்களின் தனிப்பட்ட உரிமையை பாதுகாக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.