இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். சமூக வலைதளங்களுக்கும் அடிமையாகி விட்டார்கள். அதில் முக்கியமானது தான் whatsapp. உலகில் என்ன நடந்தாலும் நாம் விரல் நுனியில் தெரிந்து கொள்கிறோம். அந்த அளவிற்கு இணையத்தின் பயன்பாடு அதிகரித்து விட்டது. இதிலிருந்து தப்பிப்பது எப்படி என்பது குறித்து தெரிந்து கொள்வோம். பலரும் தங்களை பெரிய நிறுவனம் போல காட்டிக் கொள்கிறார்கள் .அதாவது தாங்கள் தலைசிறந்த நிறுவனம் என்றும், வங்கி தொடர்பான மெசேஜ்கள் போன்று லிங்குகளை அனுப்பி வைத்து அதை நாம் கிளிக் செய்யும்போது தகவல்களை திருடி ஏமாற்றுவார்கள்.

எனவே வாட்ஸ் அப்பில் வரும் தேவையில்லாத எந்த ஒரு லிங்கையும் கிளிக் செய்ய வேண்டாம். யாராவது குரூப்பில் இணைத்து விடலாம். முன்பின் தெரியாத எண்ணில் இருந்து மெசேஜ் வரலாம் அந்த எண் வெளிநாட்டு எண் போன்ற இருந்தால் ஏதேனும் சந்தேகம் இருந்தால் பதில் அளிக்க வேண்டாம். இரண்டு முறை பரிசோதனை செய்ய வேண்டும். எடுத்த உடனே தனிப்பட்ட தகவல்களை கொடுக்க வேண்டாம்.

குறிப்பாக கடவுச்சொற்கள் கிரெடிட் கார்டு எண்களை கொடுக்க வேண்டாம். மிக முக்கியமாக உங்கள் எண்ணிற்கு பரிசு பொருள் கிடைத்துள்ளது. லட்சக்கணக்கில் வென்றீர்கள் வாழ்த்துக்கள் என்று கூறி மெசேஜ் வரும். இது உங்களுடைய தகவல்களை திருடுவதற்கான ஒரு ஏமாற்று வேலை எனவே மிக கவனமாக இருக்க வேண்டும்.