அயோத்தியாவில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் குடமுழுக்கு விழா இந்த மாதம் 22ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான விழா அழைப்பிதழ் தயார் செய்யப்பட்டு பலருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சமூக வலைதள மூலமாக ஏமாற்றும் சில கும்பல் ராம் மந்திர் விழாவை வைத்து ஏமாற்ற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி குறிப்பிட்ட ஒரு லிங்கை வாட்ஸ் அப் மூலமாக அனுப்பி ராம் மந்திர் விழாவில் பங்கேற்க விஐபி டிக்கெட் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்து கேட்கப்பட்ட தகவல்களை அளிக்கவும் என்று அனுப்பப்படுகிறது. அதேபோன்று whatsapp மூலமாக செயலிகளையும் அனுப்பி இன்ஸ்டால் செய்வதன் மூலம் விஐபி டிக்கெட்டுகள் பெறலாம் என்று கூறப்படுகிறது.

இதனை நம்பி மக்கள் லிங்கை தொட்டு தகவல்களை பகிர்ந்தாலோ அல்லது செயலியை டவுன்லோட் செய்தாலோ அவர்கள் ஹேக் செய்யப்பட்டு தனிப்பட்ட விபரங்கள் திருடப்படலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனால் அயோத்தி ராமர் கோவிலுக்கு போக வேண்டும் என்ற ஆசையில் தவறான செயலிகளை பதிவிறக்கம் செய்தோ, லிங்குகளை தொட்டோ எந்த இழப்புக்கும் ஆளாகாமல் கவனமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.