உலகம் முழுவதும் இன்றைய காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருமே ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில் உங்களுடைய ஸ்மார்ட் போன் தண்ணீரில் விழுந்து விட்டால் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்பது பற்றி தற்போது பார்க்கலாம். உங்களுடைய செல்போன் தவறுதலாக தண்ணீரில் விழுந்து விட்டால் முதலில் சர்வீஸ் சென்டருக்குதான் தான் எடுத்துச் செல்ல வேண்டும். அது மட்டும் தான் சிறந்த முடிவாக இருக்கும். செல்போன் தண்ணீரில் விழுந்த உடன் உடனடியாக எடுத்து போனை உதற கூடாது. அப்படி செய்தால் தண்ணீர் படாத பாகங்களுக்கும் தண்ணீர் சென்று விடும். போனை தண்ணீரில் இருந்து வெளியே எடுத்த உடன் உடனடியாக பட்டனை அமுக்க கூடாது.

ஸ்விட்ச் ஆஃப் அல்லது சுவிட்ச் ஆன் செய்யாமல் உடனடியாக சர்வீஸ் சென்டருக்கு எடுத்துச் செல்ல வேண்டும். தண்ணீரில் நனைந்த செல்போனை உடனடியாக சார்ஜிங் செய்யக்கூடாது. அப்படி செய்தால் செல்போனின் உள் பாகங்கள் செயலிழந்து விடும். செல்போன் தண்ணீரில் விழுந்தால் 5 மணி நேரம் கழித்து தான் சார்ஜ் செய்ய வேண்டும். தண்ணீரில் விழுந்த ஸ்மார்ட்போனை 2 நாட்களுக்கு பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. அதன் பிறகு போன் தண்ணீரில் விழுந்தால் உடனடியாக தலைமுடியை காய வைக்கும் Dryer கொண்டு காய வைக்க கூடாது. அப்படி செய்தால் செல்போன் சூடாகி பாழாகிவிடும். மேலும் செல்போன் தண்ணீரில் விழும்போது உடனடியாக சர்வீஸ் சென்டருக்கு எடுத்து செல்வது மட்டும்தான் ஒரே சிறந்த வழி ஆகும்.