உலகம் முழுவதும் வருகிற ஜூன் 15ஆம் தேதி அதாவது நாளை தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் தங்கள் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கும் தங்கள் தந்தையை உணர்ச்சி மனரீதியாக புரிந்து கொள்ளவும் குடும்பத்தில் தந்தையின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளவும் இந்த தினம் வழிகாட்டுகிறது.

இந்நிலையில் தந்தை தினத்தை முன்னிட்டு ஆன்லைன் விற்பனை தளத்தில் ஒரு கேக்கின் விலை ₹5 லட்சம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பார்த்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சிலர் எழுத்துப் பிழையாக இருக்கக்கூடும் என்று கூறினர். மற்ற சிலர் வங்கியில் கடன் வாங்கித்தான் இந்த கேக்கை சாப்பிட வேண்டும் என்று வேடிக்கையாக பதிவிட்டு இருந்தனர். இது தொடர்பான புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.