
இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே ‘ஹிட்மேன்’ என அழைக்கப்படும் ரோஹித் சர்மா, உலக கிரிக்கெட்டில் முக்கியமான இடத்தை பெற்றுள்ள ஒரு சாதனை வீரர். தனது சக்திவாய்ந்த பேட்டிங் மற்றும் அமைதியான தலைமைத்திறனுக்காக அறியப்படும் இவர், 2024 ஆம் ஆண்டு ஐசிசி T20 உலகக் கோப்பையும், 2025 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிரோஃபியையும் இந்தியா வெல்ல செய்தார்.
2023 ODI உலகக் கோப்பின் இறுதிப் போட்டிக்கும் இந்திய அணியை வழிநடத்தினார். இவரது மனைவி ரிதிகா சஜ்தே என்பவராகும். இருவரும் 2015 டிசம்பர் 13ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் இருவருக்கும் சமையரா என்ற மகளும், 2024 நவம்பரில் பிறந்த ஆஹான் என்ற மகனும் உள்ளனர்.
சமையரா ரோஹித் சர்மா மற்றும் ரிதிகாவின் முதல் குழந்தை. இப்போது மும்பை நகரிலுள்ள மிகப் பிரம்மாண்டமான ‘தீருபாய் அம்பானி இன்டர்நேஷனல் ஸ்கூல்’ (DAIS) இல் படித்து வருகிறார். இந்தப் பள்ளி 2003-ம் ஆண்டு நிதா அம்பானி அவர்களால் தொடங்கப்பட்டது.
இந்தப் பள்ளி ICSE, IGCSE, மற்றும் IBDP படிப்புகளை வழங்குகிறது. உலகத் தரமான கல்வியையும், சிறந்த அடிப்படை வசதிகளையும் கொண்ட இந்தப் பள்ளியில் இந்தியாவின் பிரபலங்களின் குழந்தைகள் கல்வி பெறுகின்றனர்.
இந்த பள்ளியின் கட்டணங்கள் இந்திய அளவுக்கு மிகவும் உயர்வாக உள்ளன. 2023-24 கல்வியாண்டிற்கான ஆண்டு கட்டணம் கிண்டர்கார்டன் வகுப்பிற்கு ரூ.14 லட்சம் முதல் 12ஆம் வகுப்பிற்கு ரூ.20 லட்சம் வரை உள்ளது. இந்தக் கட்டணத்தில் புத்தகங்கள், சீருடை, போக்குவரத்து மற்றும் பிற வசதிகளும் அடக்கம்.
சமையரா கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளியின் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு அரங்கில் நிகழ்ச்சி வழங்கிய புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலானது. ரோஹித் சர்மா மற்றும் அவரது மனைவியும் அந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
வகுப்புவாரியாக கட்டண விவரம்:
LKG முதல் 7ஆம் வகுப்பு வரை: வருடாந்த கட்டணம் ரூ.1.70 லட்சம்.
8 முதல் 10ஆம் வகுப்பு வரை: வருடாந்த கட்டணம் ரூ.5.90 லட்சம்.
11 மற்றும் 12ஆம் வகுப்பு: வருடாந்த கட்டணம் ரூ.9.65 லட்சம்.
Grade 12 (IB Diploma Programme): வருடாந்த கட்டணம் சுமார் ரூ.20 லட்சம்