
இந்திய அணி ஆஸ்திரேலியாலில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 4 போட்டியில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதையடுத்து 5வது போட்டி சிட்னியில் இன்று நடைபெற்று வருகிறது. முன்னதாக இந்த போட்டியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் மோசமான பேட்டிங்கை செய்தார். கடந்த முறை மேட்ச் வின்னராக இருந்த இவர், இந்த முறை சொதப்பி வருகிறார். குறிப்பாக இந்த தொடரில் 4வது போட்டியில் முக்கியமான தருணத்தில் அதிரடியாக விளையாடி ஆட்டம் இழந்தார். இதன் காரணமாக ‘முட்டாள் முட்டாள்’ என்று சுனில் கவாஸ்கர் நேரலையில் விமர்சித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது, உண்மையிலேயே இந்த விளையாட்டும், இந்திய கிரிக்கெட் தான் என்னை உருவாக்கியது. எனவே ரிஷப் பண்ட் போல திறமையானவர்கள் அவுட் ஆனது ஏமாற்றமாக இருந்தது. அதற்கு முந்தைய பந்தில் அவர் அருமையாக விளையாடினார். ஆனால் அடுத்த பந்தில் அவர் அவுட் ஆனதற்கு அவருடைய ஈகோ தான் காரணம். அவருக்கு இரு பக்கமும் பீல்டர்கள் இருந்தார்கள், அது தெரிந்தும் அவர் தன்னுடைய விக்கெட்டை கொடுத்தார். இதற்கு முன் அவர் அற்புதமாக விளையாடிய ஆட்டங்களை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் ஆஸ்திரேலியாவில் இப்படி ஆடினால் தான் ரன் அடிக்க முடியும் என்று அவர் நினைத்திருக்கிறார். ஒரு வேலை அந்தப் பந்து சிக்சர் போயிருந்தால் நானே அவரை பாராட்டி இருப்பேன், ஆனால் அங்கே நீங்கள் கொஞ்சமும் கவலையின்றி அவுட்டானீர்கள் என்று கூறினார்.