உத்தரபிரதேசத்தில் உள்ள நொய்டாவில் உள்ள 168 செக்டர் பாரஸ்ட் சீசன் சொசைட்டியில் பெண் ஒருவர் மற்றொரு பெண்ணை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு பெண்  மற்றொரு பெண்ணின் தலைமுடியை ஆக்ரோஷமாக பிடித்து இழுத்து கொண்டு கத்துகிறார்.

அருகில் உள்ளவர்கள் தாக்குதலை தவிர்ப்பதற்காக முயற்சி செய்தும், அந்தப் பெண் மற்றொரு பெண்ணின் முடியை விடாமல் பிடித்து இழுத்துக்கொண்டு காவல்துறையை அழைக்க சொல்கிறார். இதனால் அருகில் இருந்தவர்களால் அந்தப் பெண்ணை கட்டுப்படுத்த முடியவில்லை.

தாக்கப்பட்ட பெண் தரையில் அமர்ந்து எதுவும் பேசாமல் அமைதியாக செயலற்ற நிலையில் உள்ளார். இச்சம்பவம் குறித்த விசாரணையில், தாக்குதல் நடத்திய பெண்ணின் தாயை மற்றொரு பெண் திட்டியதால் அந்த தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதத்தில் ஆரம்பித்த தகராறு இறுதியில் கைகலப்பாக மாறியது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை கடந்து வருகிறது. மேலும் பலரும் இச்சம்பவம் தொடர்பாக பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.