என் மண், என் மக்கள் யாத்திரையில் கலந்து கொண்டு பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, கச்சத்தீவை கொடுத்த போது, பாராளுமன்றத்தில் அன்றைய அமைச்சர் ஸ்வரன் சிங் எந்திரிச்சி பேசுகிறார். இந்த மாதிரி கச்சத்தீவு கையெழுத்து போட்டாச்சு,  நாங்கள் கொடுத்துட்டோம் என்று… அப்போ மூக்கையா தேவர் அவர்கள் கொதித்தெழுந்து, பாராளுமன்றத்தில் பேசுகிறார். கச்சத்தீவு என்னுடைய தொகுதியில் உள்ளது. நீங்கள் ஜனநாயகம் பேசிக்கொண்டு சர்வாதிகாரி போல் நடந்து கொண்டிருக்கிறீர்கள்.

பல்லாயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது. பல்லாயிரம் மீன்பிடி படகுகள்  நிறுத்தப்பட்டுள்ளன. இலங்கை படை கச்சத்தீவை நோக்கி செல்கிறது. கச்சத்தீவு தமிழ்நாட்டினுடைய பகுதி. எப்போதும் அது  தமிழ்நாட்டுக்கு தான் சொந்தம் என பேசும் போது,  காங்கிரஸ்காரர்கள் இடை மறுக்கிறார்கள்…

அப்பொழுது மூக்கையா தேவர் அவர்கள்,  காங்கிரஸ் கட்சியை பார்த்து… நீங்கள் அனைவருமே தமிழகத்தினுடைய துரோகிகளை என்று சொல்லிவிட்டு,  பாராளுமன்றத்தில் இருந்து வெளியே நடந்து வருகின்றார். இதை எப்பொழுதுமே உசிலம்பட்டினுடைய மக்கள் மறந்து விடக்கூடாது.  காங்கிரஸ் கூட்டணியில் இருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகம் 2024இல் கிளம்பி வருவார்கள். இவர்களை துரோகிகளை என்று 1974 இல் பாராளுமன்றத்தில் மூக்கையா தேவர் அவர்கள் அப்பவே சொல்லிவிட்டார். நீங்கள் எல்லாம் தமிழகத்தினுடைய துரோகிகள்..

ஒருவேளை 2009இல் மூக்கையா தேவர் அவர்கள் உயிரோடு இருந்திருந்தால் ? இலங்கையில் நடந்த இனப்படுகொலையை  பார்த்திருந்தால் என்ன நடந்திருக்கும் ? என்று எனக்குத் தெரியாது. அப்படிப்பட்ட வீரத்துக்கு சொந்தக்காரர். மிக மிக உரத்த குரலிலே பாராளுமன்றத்தில் பேசியவர். ஏன் ?  1977 தன்னுடைய கடைசி தேர்தலிலும் மூக்கையா தேவர் அவர்கள் உசிலம்பட்டியில் போட்டியிட்டபோது,  புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் மூக்கையா தேவர் அவர்கள் எதிர்த்து இங்கே வேட்பாளரே போடல. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 1977இல் வேட்பாளரே போடல.

அதற்கு பிறகு புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் சொல்லுகின்றார்…  தமிழ் நிலத்திற்காக….  தமிழ் அன்னைக்காக…  தமிழ் மக்களுக்காக பாடுபட்ட மூக்கையா தேவர் அவர்களை  எதிர்த்து,  எப்படி நான் வேட்பாளரை போடுவது ? இது அவர் வெற்றி பெற வேண்டிய மண். அதனால் தான் தொடர்ச்சியாக 25 ஆண்டுகள் அந்த அற்புதமான அய்யாவை தொடர்ந்து வெற்றி பெறுவது செய்து, எப்படிப்பட்ட அரசியல்வாதிகளை  நீங்கள் தேர்ந்தெடுத்த, எப்படிப்பட்ட பூமி இது என தெரிவித்தார்.