உத்திரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த சாலையோர வியாபாரியின் வீட்டில் ஜிஎஸ்டி அதிகாரிகள் திடீர் சாதனை மேற்கொண்டார்கள். துணி விற்று தினமும் 500 ரூபாய் சம்பாதிக்கும் அவர் வரி மோசடி செய்து 366 கோடி திருடியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஹிஜாப் அகமது என்ற அந்த வியாபாரி இந்த குற்றச்சாட்டில் இருந்து தன்னை மீட்குமாறு ஜிஎஸ்டி உயர் அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் இவர் ஒரு பழைய குடோனை தொடங்கிய போது ஜிஎஸ்டி பதிவு செய்துள்ளார்.

ஆரம்பத்தில் தினசரி 500 முதல் 1000 ரூபாய் வரை சம்பாதித்து வந்த அவருக்கு நாளடைவில் நஷ்டம் ஏற்பட்டதால் அந்த தொழிலை விட்டுவிட்டு துணி விற்க தொடங்கி விட்டார். அப்போது அந்த ஜிஎஸ்டி கணக்கை மூடி விடுமாறு தனது கணக்காளரிடம் கூறி கூறியதாகவும் அகமது தெரிவித்திருக்கிறார். இப்போது என்ன தவறு நடந்தது என தெரியவில்லை என விழிக்கும் அவர் உண்மையாக மோசடி செய்தவரை கண்டறிய வேண்டும் என ஜிஎஸ்டி துறையை வேண்டி கேட்டுக் கொண்டுள்ளார்.

மோசடி குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருவதாக ஜிஎஸ்டி சிறப்பு விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார். ஒரே நிறுவனத்தின் ஜிஎஸ்டி கணக்கு எண்ணை மற்றவர்கள் பயன்படுத்துவதாக புகார்கள் வந்திருக்கின்றன. ஹிஜாப் அகமது மற்றும் அவரது கணக்காளரிடம் விசாரணை நடைபெற்றது. விசாரணைகள் முடிந்த பின்னர் கூடுதல் தகவல்கள் கிடைக்கும் என அவர் கூறியுள்ளார்.