கிறிஸ்மஸ் கொண்டாட்டத்திற்கு இன்னும் சில நாட்களை உள்ள நிலையில், மக்களை அதற்காக தயாராகி வருகின்றனர். மற்றொருபுறம் முதியவர் ஒருவர், கிறிஸ்மஸ் தாத்தா வேடம் அணிந்து பல லட்சங்களை சம்பாதித்து வருகிறார் எப்படி தெரியுமா. எடி ரிச் என்பவர் சப்ளை ஸ்டார் மேனேஜராக முழு நேரமாக வேலை பார்த்து வந்துள்ளார். அதன் பின் ஓய்வு பெற்ற பிறகு, 1995ம் ஆண்டு தனது பக்கத்து வீட்டார் கூறியபடி கிறிஸ்மஸ் தாத்தா வேடம் அணிந்துள்ளார். இப்படி வேடிக்கையாக தொடங்கிய இவருக்கு, இது மிகவும் பிடித்துள்ளது. எனவே கிறிஸ்துமஸ் காலங்களில் இணையதளத்தில் இப்படி வேடம் அணிந்து நடிக்க ஆரம்பித்துள்ளார். இவரது நகைச்சுவை பேச்சு மக்களுக்கு மிகவும் பிடித்துப் போக நல்ல பிரபலமும் ஆகியுள்ளார்.

இதன் மூலம் லட்சக்கணக்கில் பணமும் கிடைத்துள்ளது. இவர் தனது பணி ஓய்வுக்குப் பிறகு, என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. இதனால் தொடர்ந்து பல இடங்களில் இதுபோன்று வேடம் அணிந்து நடித்துள்ளார். இதற்கு எடியின் மகன் கிறிஸ் பெரிதும் உதவியாக உள்ளார். பிரத்தியோகமாக ஸ்கிரிப்டுகள் எழுதி கொடுப்பது, வீடியோ எடிட்டிங் செய்வது போன்ற வேலைகளை செய்துள்ளார். இப்படி கடந்த வருடம் மட்டும் இவர்கள் இருவரும் சேர்ந்து 44 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டி உள்ளனர். இதுகுறித்து எடி கூறியதாவது, நான் மக்களை கவனித்து கொள்ள விரும்புகிறேன் என்னால் முடிந்தவரை அவர்களுக்கு திரும்பி தர நினைக்கின்றேன் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறினார்.