
சென்னையில் பிரபல இன்ஜினியரிங் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் தினேஷ்குமார், அக்பர் அலி, வசந்தகுமார் ஆகிய 3 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் கடந்த சனிக்கிழமை அன்று புதுச்சேரிக்கு உல்லாச சுற்றுலா பயணம் சென்றுள்ளனர். அப்போது அவர்கள் உல்லாச சுற்றுலாவை அழகிகளுடன் கொண்டாட திட்டமிட்டு இருந்தனர்.
இதற்காக ஆன்லைன் மூலம் ரூபாய் ஒன்றரை லட்சம் பணம் அனுப்பி 4 விபச்சார அழகிகளை அனுப்புமாறு முன்பதிவு செய்தனர். ஆனால் ஆன்லைனில் பணத்தைப் பெற்றுக் கொண்ட விபச்சார தரகர் அழகிகளை அனுப்பவில்லை. இதனால் அழகிகள் வேண்டும் அல்லது பணத்தை திருப்பி தர வேண்டும் என்று கல்லூரி மாணவர்கள் மூன்று பேரும் கோபமடைந்தனர். இதையடுத்து தரகர் இருக்கும் இடத்தை அறிந்து எழும்பூரில் வசிக்கும் அவரது வீட்டிற்கு நேரடியாக வந்து தகராறில் ஈடுபட்டனர்.
அப்போது நடந்த மோதலில் மாணவர்கள் மூன்று பேரும் தரகரை அடித்து உடைத்து கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது கடத்திச் செல்லப்பட்ட தரகர் மீட்கப்பட்டார். இதை அடுத்து காவல்துறையினர் அந்த மூன்று மாணவர்களையும் கைது செய்தனர்.