இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபியில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை எளிதாக வீழ்த்தியது. இந்த இரண்டு டெஸ்ட் போட்டியுமே 5 நாட்கள் நடக்கவில்லை. அதற்கு விரைவாகவே முடிந்து விட்டது. இதனை  தொடர்ந்து மூன்றாவது டெஸ்ட் போட்டி  இந்தூரில் உள்ள மைதானத்தில் மார்ச் 1-ம் தேதி நடைபெற்றது இந்த டெஸ்ட் போட்டியும் 5 நாட்கள் நடக்கவில்லை.

இந்த முறை ஆஸ்திரேலியா அணி இந்திய அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பழி தீர்த்தது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு இடையே இதுவரை நடந்த மூன்று டெஸ்ட் போட்டியுமே விரைவாக முடிந்துவிட்டது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் மட்டும் தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெற முடியும். இல்லையெனில் நியூசிலாந்து- இலங்கை அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டிக்காக காத்திருக்க வேண்டும்.

இந்நிலையில் டெஸ்ட் போட்டிகள் 3 நாளில் முடிவடைந்தது குறித்து தற்போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா விளக்கம் கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, இந்தியாவில் மட்டும் இல்லை. மற்ற நாடுகளிலும் டெஸ்ட் போட்டிகள் 5 நாட்கள் வரை நடைபெறுவது கிடையாது. சமீபத்தில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் கூட 3 நாட்களில் முடிவடைந்தது. மேலும் டெஸ்ட் போட்டிகள் விறுவிறுப்பாக இல்லை என பாகிஸ்தான் ரசிகர்கள் கூறியதால் அவர்களுக்காக போட்டியை சுவாரசியமாக மாற்றினோம் என்று புன்னகையுடன் கூறினார்.