கர்நாடகா துணை முதல்வர் டி.கே சிவக்குமார் மேகதாதுவில் அணை கட்டப்படும் என்று அறிவித்ததற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையும் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக அண்ணாமலை, மேகதாதுவில் அணை கட்ட வேண்டும் என்பதை கர்நாடகாவில் வைத்து சொன்ன போது அங்கு வைத்தே நான் எதிர்த்தேன்.

கர்நாடகா துணை முதல்வர் மேகதாதுவில் அணை கட்டப்படும் என்று சொன்னதற்கு தமிழக காங்கிரசார் வாய் திறக்கவில்லை. தமிழக அரசுக்கு எதிராக கர்நாடகா மற்றும் கேரளா அரசுகள் செயல்பட்ட போதிலும் முதலமைச்சர் வாய் திறக்கமால் தமிழக உரிமைகளை விட்டுக் கொடுத்து வருகிறார். தமிழக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்தவில்லை என்றால் அதை நாங்கள் தடுத்து நிறுத்துவோம். மேலும் அந்த ஆற்றல் எங்களுக்கு இருக்கிறது என்று கூறினார்.