தமிழ் சினிமா உலகில் ஹன்சிகா பிரபல நடிகையாக வலம் வரும் நிலையில் சென்ற வருடம் டிசம்பர் மாதம் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். மிகவும் பிரமாண்டமாக நடந்த இவர்களின் திருமணம் முடிந்த நிலையில் போட்டோக்கள் வெளியாகி வைரல் ஆனது. திருமணத்தை முடித்த உடனே இருவரும் ஹனிமூன் சென்றார்கள்.

இந்த நிலையில் இவர்களின் திருமண வீடியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான பிரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹன்சிகா பேசியதாவது, தன்னுடைய திருமண விஷயங்கள் குறித்து பேசினார். மேலும் திருமணத்திற்கு பிறகு நாங்கள் ஹனிமூன் செல்லவில்லை எனவும் அது ஜோடிகள் சேனலும் வெக்கேஷனல் என தெரிவித்திருக்கின்றார்.