
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நடைபெற்ற காவல் நிலைய மரண சம்பவம் தொடர்ந்தும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மானாமதுரை டிஎஸ்பி தலைமையில் செயல்பட்ட ஒரு ‘தனிப்படை’ போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்ற 25 வயது இளைஞர் அஜித்குமார் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
மனித மிருகங்களால் கொல்லப்பட்ட மடப்புரம் அஜித்குமாரின் தாயாரிடமும், தம்பியிடமும் தொலைபேசி வாயிலாகப் பேசினேன்; என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் ஆறுதலையும் தெரிவித்தேன்.
தம்பி அஜித்குமார் கொலைக்கான நீதியைப் பெற்றுத் தர நிச்சயம் @AIADMKOfficial துணை நிற்கும்!… pic.twitter.com/plaP3x2Oc4
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) July 2, 2025
அவரது மரணத்துக்குப் பின்னால் காவலர்களால் கொடூரமாக தாக்கப்பட்டதாக வீடியோ வெளியாகி, சமூக ஊடகங்களில் வைரலாகி பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து டிஎஸ்பி சண்முகசுந்தரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட ஆறு போலீசாரும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அதில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்தும், உயிரிழந்த அஜித் குமாரின் தாயாருக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொலைபேசி மூலம் ஆறுதல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, மனித மிருகங்களால் கொல்லப்பட்ட மடப்புரம் அஜித் குமாரின் தாயார் இடமும், தம்பியிடமும் தொலைபேசி வாயிலாக பேசினேன். என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும், ஆறுதலையும் தெரிவித்தேன். தம்பி அஜித்குமார் கொலைக்கான நீதியை பெற்றுத்தர நிச்சயம் அதிமுக துணை நிற்கும் என்று கூறியுள்ளார்.