விருதுநகர் மாவட்டத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்த தவறான தகவல் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமளித்துள்ளார். இதில் அவர் கூறியதாவது, தமிழ்நாட்டின் நிதி நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாகவும், திவாலாக போவதாகவும் எடப்பாடி பழனிசாமி தவறான தகவலை பொதுமக்களிடையே பரப்பி வருகிறார். எதிர் கட்சி தலைவர் தொடர்ந்து அடிப்படை புரிதல் இன்றி பேசி வருகிறார்.

பொதுவாக உள்நாட்டில் உற்பத்திய அளவை கணித்தே, ஒரு நாடு கடன் வாங்கும் அளவு மற்றும் அதனை திருப்பி செலுத்தும் திறன் ஆகியவற்றை முடிவு செய்கிறது. நிதி குழு பரிந்துரையின்படி 28.7% அளவே கடன் வாங்க கடந்த 2021- 2022 ஆம் ஆண்டு வரைமுறை விதித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் 27. 01% அளவுக்கு கடன் வாங்கப்பட்டுள்ளது. இது நிதி குழு கொடுத்த வரைமுறையை விட குறைவானதே ஆகும்.

அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட நிதிச் சுமையையும் நாங்கள் தான் சரி செய்து வருகிறோம்.  ஆளும் மாநிலங்களுக்கே அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் 4 தென் மாநிலங்களுக்கும் சேர்த்து மொத்தமாக ரூபாய் 27 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறு செய்தியாளர்கள் சந்திப்பில் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.