
இந்தி திரை உலகின் பிரபலம் முன்னணி நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் ஹாலிவுட் பாடகர் ஆன நிக்ஜோனாசை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
இவர்கள் குடும்பத்தோடு லாஸ் ஏஞ்சல்ஸில் வசித்து வருகின்றனர். பிரியங்கா சோப்ரா திருமணத்திற்கு பின்னரும் பாலிவுட், ஹாலிவுட் திரையுலகில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது,”வீட்டில் உள்ள வேலைகளிலேயே துணி துவைப்பதுதான் மிகவும் கடினமாக இருக்கிறது. என்னுடைய மாமியார் தான் துணிகளை எப்படி துவைப்பது என்று எனக்கு கற்றுக் கொடுத்தார்.
அதோடு மட்டுமல்லாமல் என் துணிகளையும் அவர் துவைக்கவும் செய்துள்ளார். எனக்கு துணிகளை இஸ்திரி போட்டு மடித்து வைப்பது கூட எளிது. ஆனால் அவற்றை துவைப்பதுதான் மிகவும் கடினம்.
என்னுடைய மாமியார் கடந்த 2000ம் ஆண்டில் நான் உலக அழகி பட்டம் பெற்றபோது தொலைக்காட்சியில் பார்த்து ரசித்ததாக பெருமையுடன் கூறுவார்” என பெருமையாக கூறினார்.