பொதுவாக நாம் அனைவரும் உடல் எடையை குறைப்பதற்காக ஏதேதோ செய்வோம். சிலர் உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்வார்கள். சிலர் உணவு கட்டுப்பாட்டுடன் இருப்பார்கள். உடல் எடையை குறைக்க இது மட்டும் போதாது. மேலும் எதை நிச்சயம் தவிர்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். சில உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது என சொல்லப்படுகிறது. அது என்னென்ன உணவு என்பதை இத்தொகுப்பில் பார்க்கலாம்.

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் ஒருபோதும் பச்சை காய்கறிகளை சாப்பிடக்கூடாது. வெறும் வயிற்றில் சாப்பிடுவது உங்களின் செரிமான அமைப்பை சீர்குலைத்து வயிற்று வலி, அமிலத்தன்மை போன்றவற்றை உண்டாக்கும். அடுத்ததாக வெறும் வயிற்றில் சிட்ரஸ் அமிலங்களை சாப்பிடுவதால் வயிற்றில் அமிலம் உண்டாகும். ஏனெனில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும். பொறித்த உணவுகள் கண்டிப்பாக வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது.

சிலருக்கு காபி, டீயுடன் பொரித்த உணவுகளை சாப்பிடும் வழக்கம் உள்ளது. இதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். காலை வேளையில் குளிர்பானங்கள் உடல் பருமனுக்கு வழிவகுக்கும். குளிர்பானங்களை வெறும் வயிற்றில் குடிப்பது அமிலத்தன்மை, இறப்பை பிரச்சனைகள், குமட்டல் போன்றவையும் ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. எனவே சரியான வழியை கடைப்பிடித்து ஆரோக்கியமான முறையில் வாழுங்கள்.