
நியூசிலாந்துக்கு எதிராக மும்பையின் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 147 ரன்கள் கூட எடுக்க முடியாத அளவில் 0-3 என்ற கணக்கில் ஆட்டத்தை இழந்தது. தங்களது சொந்த மண்ணில் இந்திய அணி ‘ஒயிட்வாஷ்’ ஆனது இதுவே முதல் முறையாகும். இதனால் இந்திய அணி மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த தோல்வியால் வரைய இருக்கும் 2025ம் ஆண்டு நடக்க இருக்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற அடுத்து நடைபெறும் ஆஸ்திரேலிய தொடரில் இந்தியா குறைந்தபட்சம் 3 போட்டிகளில் வெற்றி பெற வேண்டும்.
இந்நிலையில் இந்தியாவின் இந்த தோல்வி தூங்கிக் கொண்டிருக்கும் ராட்சசனை தட்டி எழுப்பியது என்று ஆஸ்திரேலியா ஜோக்ஸ் ஹேசல்வுட் வீரர் தெரிவித்துள்ளார். ஏனென்றால் அவர்கள் இந்த தோல்வியில் இருந்து மீட்டெழுந்து, ஆஸ்திரேலியாவில் இந்தியா போராடும் அவர்களை எதிர்கொண்டு வீழ்த்த நாங்களும் தயாராக உள்ளோம் என்று அவர் கூறினார். இது பற்றி அவர் கூறியதாவது, இந்தியா டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் ஆனதால் அவர்களுடைய தன்னம்பிக்கை கொஞ்சம் குறைந்து இருக்கலாம்.
இருப்பினும் அவர்களின் பெரும்பாலானோர் இங்கிருந்து விளையாடி அனுபவத்தை கொண்டுள்ளனர். இந்தியா சந்தித்த தோல்வி எங்களுக்கு மிகவும் நல்லது. நியூசிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள் இந்தியாவில் 3-0 என்ற கணக்கில் வெல்வது மிகவும் கடினமானது. இருப்பினும் அவர்கள் அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளனர். இந்தியா தோல்வியை சந்தித்து இங்கு வருவதால் எங்களுக்கு எதிரான தொடர் பெரிதாக இருக்கும். மேலும் ரசிகர்கள் கூட்டம், அதிகமாக இருக்கும் அதோடு டிவி ரேட்டிங் பெரிதாக இருக்கும். எனவே இந்த தொடர் மிகவும் பெரிதாக இருக்கும் என்று அவர் கூறினார்.