
ரிசர்வ் பேங்கில் இருந்து குரல் செய்தி என வந்திருந்தால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதாவது உங்கள் கிரெடிட் கார்டு மோசடியில் ஈடுபட்டுள்ளது. அதோடு அடுத்து 2 மணி நேரத்தில் உங்கள் வங்கி கணக்குகள் முடக்கப்படும் என்றும் ரிசர்வ் வங்கியில் இருந்து அனுப்பியது போல குரல் செய்தி வந்தால் எச்சரிக்கையாக இருங்கள்.
உதாரணத்திற்கு அவர்கள் எண் 9 அழுத்தவும் என்று கூறுவார்கள். அதை நீங்கள் செய்தால் உங்கள் வங்கி கணக்கில் இருக்கும் அனைத்து பணமும் பரிபோகிவிடும். எனவே அந்த எண்ணை உடனடியாக பிளாக் செய்து விடுங்கள். அதன் பின் இதுகுறித்து புகார் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஏனென்றால், ரிசர்வ் பேங்க் ஒரு போதும் மக்களை அழைப்புகள் மூலமாகவோ அல்லது ஈமெயில் மூலமாகவோ தொடர்பு கொள்ளாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.