சுவாமி விவேகானந்தரை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆனால் அவரது மன வலிமையை பற்றி அறிந்தவர்கள் வெகு சிலரே.  உயிரே போகும் நிலை வந்தாலும் தைரியத்தை விடாதே நீ சாதிக்க பிறந்தவன், துணிந்து நில், எதையும் வெல் என்பது  விவேகானந்தரின் கூற்று அவரது இந்த கூற்றுக்கு ஏற்ப விவேகானந்தரின் வாழ்வில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஒரு முறை சுவாமி விவேகானந்தர் தனது நண்பரின் வீட்டிற்கு சென்று இருந்த போது அங்கு ஏராளமான மாடுகள் வளர்க்கப்பட்டுள்ளது. ஒரு நாள் மாலை நேரம் அங்கிருந்த பண்ணையை விவேகானந்தர் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது நண்பர் மற்றும் நண்பரின் மனைவி உடன் இருந்துள்ளனர்.

அந்த சமயத்தில் சற்று நேரம் எதிர்பாராத விதமாக மாடு ஒன்று அவர்களை நோக்கி சீறிப்பாய்ந்தது. இதனைப் பார்த்த நண்பனின் மனைவி மயங்கி விழுந்தார். விவேகானந்தரின் நண்பரோ மாடு வரும் வேகத்தை பார்த்து பயந்து தலை தெரிக்க ஓடிவிட்டார். ஆனால் விவேகானந்தர் தான் நின்ற இடத்திலேயே அசையாமல் அப்படியே நின்றார். வேகமாக வந்த மாடு விவேகானந்தரையும் மயங்கி கிடந்த நண்பரின் மனைவியும் விட்டுவிட்டு தலை தெரிக்க பயந்து ஓடிய நண்பரை துரத்தியது.

அதிர்ஷ்டவசமாக வீடு ஒன்றுக்குள் நுழைந்து மாட்டிடமிருந்து தப்பித்த நண்பர் விவேகானந்தரிடம் இது குறித்து கேட்டபோது புன்னகைத்தவாறு தான் எதையும் வித்தியாசமாக செய்துவிடவில்லை வருவதை சமாளிப்போம் என்ற மனவலிமையுடன் நின்று விட்டேன் எனக் கூறினார். அதுமட்டுமில்லாமல் மிருகங்களின் குணம் ஓடுபவர்களை துரத்துவது அதனால் தான் நின்று கொண்டிருந்த என்னை விட்டுவிட்டு ஓடிக் கொண்டிருந்த உங்களை துரத்தியது என கூறினார். உயிருக்கு ஆபத்து ஏற்படும் சமயத்தில் கூட பயப்படாமல் வருவதைப் பார்த்துக் கொள்ளலாம் என்ற மன உறுதியைப் பெற்றிருந்த சுவாமி விவேகானந்தரை அந்த சமயத்தில் அவரது நண்பர் வியந்து பார்த்தார்.